ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கனிமொழி மேல்முறையீடு

புது தில்லி, ஜூன் 10: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் திகார் சிறையில் உள்ள கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் ஆகியோர் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்தனர்.

தில்லி சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கனிமொழியின் ஜாமீன் மனு திங்கள்கிழமை (ஜூன் 13) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

இந் நிலையில் மூத்த வழக்கறிஞர் அல்டாப் அகமத் சிறப்பு நீதிமன்றத்துக்கு நேரில் வந்து கனிமொழி, சரத்குமார் ஆகியோருடன் ஜாமீன் மனு விவரங்கள் குறித்து சுமார் 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.

சமச்சீர் கல்வி: உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தமிழக அரசு மே‌ல்முறை‌யீடு

சம‌ச்‌சீ‌‌ர் க‌ல்‌வி ‌‌தி‌ட்ட‌த்தை த‌மிழக அரசு ‌நிறு‌த்த‌ி வை‌த்து‌ள்ளத‌ற்கு இடை‌க்கால தடை ‌வி‌தி‌த்து‌ள்ள செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ ‌தீ‌ர்‌ப்பை எ‌தி‌ர்‌த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் த‌மிழக அரசு மே‌ல்முறை‌யீடு செ‌ய்ய உ‌ள்ளது.

சமச்சீர் கல்வித் திட்டத்தை த‌மிழக ‌நிறு‌த்‌தி வை‌த்ததை எ‌தி‌ர்‌த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இ‌ந்த மனு‌க்க‌ளை ‌விசா‌ரி‌த்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் கொ‌ண்ட அம‌‌ர்வு, தமிழக அரசு கொண்டு வந்த சம‌ச்‌சீ‌ர் க‌ல்‌வி சட்ட திருத்தத்துக்கு நே‌‌ற்று இடைக்கால தடை விதித்தது.

நீதிபதிக‌ள் அ‌ளி‌த்த தீர்ப்பில், மாணவர்களின் நலன் கருதி பழைய கல்வி முறையை அமல்படுத்த இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. தமிழக அரசு கொண்டு வந்த சட்ட மசோதாவுக்கு இடைக்கால தடை விதிப்பதாக கூறினார். 2011-12ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையையே அமல்படுத்த வேண்டும். அதே நேரம் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ, சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தன‌ர்.

இந்தப் பிரச்சனையில் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. உய‌ர் ‌நீ‌திம‌ன்ற உத்தரவால் சமச்சீர் கல்வி முறையை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தின் இடைக்கால தடையை நீக்க கோரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் த‌மிழக அரசு மே‌ல்முறை‌யீடு செய்ய உ‌ள்ளது. ‌நீ‌திம‌ன்ற தீர்ப்பை அடுத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா ஆகியோர் நேற்‌றிரவு அவசர ஆலோசனை நடத்தினர்.

அப்போது ‌நீ‌திம‌ன்ற தடையை நீக்க கோரி உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்தை அணுகுவது பற்றி கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. உய‌ர் ‌நீ‌திம‌ன்ற உத்தரவு அரசுக்கு கிடைத்த பின்பு இன்று மீண்டும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அப்போது இறுதி முடிவு எடுக்கப்படும். என்றாலும் பள்ளிகள் வருகிற 15ஆ‌ம் தேதி திறக்கப்படும் என்ற அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே உய‌ர் ‌நீ‌திம‌ன்ற உத்தரவை எதிர்த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல்முறை‌யீடு செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக ப‌ள்‌ளி‌க்க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌சி.‌வி.ச‌ண்முக‌ம் அரசு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ளுட‌ன் டெல்லி விரைந்துள்ளா‌‌ர்.

தற்போது உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு கோடை கால விடுமுறை என்றாலும் விடுமுறை கால அம‌ர்‌வி‌ல் மே‌ல்முறை‌யீடு செய்து 15‌ஆ‌ம் தேதி பள்ளி திறப்பதற்குள் நல்ல முடிவை பெற்று விடுவோம் என்று அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ஒருவர் தெரிவித்தா‌ர்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் தொடர் தாக்குதலில் தாய்நாட்டில் ஆறடி நிலம் கிடைக்காத எம்.எஃப்.ஹுஸைன்

புதுடெல்லி:பிறந்த மண்ணில் கால்பதிக்கவேண்டும் என்ற ஆசையை மீதம் வைத்துவிட்டு இந்தியாவின் புகழை உலக அரங்கில் ஓங்கச்செய்த ஓவியர் வர்ணங்களின் உலகிலிருந்து பிரியா விடை பெற்றார்.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் நிரந்தர அச்சுறுத்தலுக்கு ஆளான எம்.எஃப்.ஹுஸைனுக்கு தாய்நாட்டில் திரும்பிவரவேண்டும் என்ற ஆசை இறுதியில் நிறைவேறாமல் போனது.

ஹிந்து தெய்வங்களின் நிர்வாண ஓவியங்களை வரைந்தார் என குற்றம் சாட்டி ஹிந்துத்துவா சக்திகள் ஹுஸைனுக்கு எதிராக திரும்பினர்.

தனது ஓவியங்களை கலை உருவாக்கமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற இந்த கலைஞரின் வார்த்தைகளுக்கு ஹிந்துத்துவா சக்திகள் மதிப்பளிக்கவில்லை.

கோயில்களின் சுவர்களில் ஹிந்து தெய்வங்களின்(?) உருவங்களை நிர்வாணமாக வரைந்து வைத்திருப்பவர்கள்தாம் ஹுஸைன் வரைந்த ஓவியங்களுக்கு எதிராக படை திரட்டினர். கொலை மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்கள் மூலம் அவர்கள் எம்.எஃப்.ஹுஸைனை நிரந்தரமாக வேட்டையாடினர்.


அவருடைய ஓவியக்கண்காட்சிகளில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் வழக்காகின.சிவசேனா, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல்களுக்கு தலைமை வகித்தன.

மஹாராஷ்ட்ராவில் பாந்தர்பூரில் பிறந்த ஹுஸைனுக்கு அவருடைய சொந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் ஓவியக்கண்காட்சி கூட நடத்த சிவசேனா அனுமதிக்கவில்லை.இந்தியாவின் பிகாஸோ என அழைக்கப்படும் எம்.எஃப்.ஹுஸைனின் பல விலைமதிக்க முடியாத ஓவியங்களை இந்த பயங்கரவாதிகள் ஓவியக்கண்காட்சிகளில் வைத்து சேதப்படுத்தினர்.

ஓவியக்கலையில் உலக பிரசித்திப்பெற்றதால் இந்தியாவின் சிவில் விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகியவற்றைப் பெற்ற முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எம்.எஃப்.ஹுஸைனுக்கு எதிராகத்தான் ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டனர்.

இறுதியில் இந்தியாவில் ஓவியங்கள் வரைவதற்கான வாய்ப்புகள் மங்கியதை தொடர்ந்து ஹுஸைன் வெளிநாடுகளுக்கு சென்றார். பிறந்த நாட்டில் வாழமுடியாத இந்த ஓவியக்கலைஞருக்கு கத்தநாடு குடியுரிமை கெளரவித்தது.பின்னர் லண்டனிலும், கத்தரிலும் தனது வாழ்க்கையை கழித்தார் ஹுஸைன்.

சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூட இந்தியாவுக்கு திரும்பிவருவதை குறித்து தனது விருப்பத்தை வெளியிட்டார் அவர்.

ஹுஸைன் கூறினார்:எனது இதயம் எப்பொழுதும் இந்தியாவிலேயே இருக்கிறது.அது என்னுடைய நேசத்திற்குரிய தேசமாகும்.

மாபெரும் மணற் தடையை நிறுவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை


கடந்த வியாழக்கிழமை (09.06.2011) இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸாவின் கான் யூனிஸ் கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள குஸா நகர நுழைவாயிலருகே மாபெரும் மணற் தடையொன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது ஆக்கிரமிப்பு இராணுவத்தின் புல்டோஸர்கள் பயன்படுத்தப்பட்டதோடு, மூன்று யுத்த தாங்கிகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. மேற்படி மணற் தடையை நிர்மாணித்துக் கொண்டிருந்த தொழிலாளிகளை உள்ளூர்வாசிகள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி அப்பகுதியையே ஒரு புகைமண்டலமாக்கியதாக ஸஃபா செய்திச் சேவை தெரிவித்துள்ளது. எதிர்பாராதவிதமாக பலஸ்தீன் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்தல், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளல், யுத்த தாங்கிகள் புடைசூழச் சென்று புல்டோஸர்களால் பலஸ்தீன் பொதுமக்களின் வீடுகள், பயிர்நிலங்களை இடித்து நிர்மூலமாக்குதல் முதலான நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் மக்களான பலஸ்தீனர்களை ஆத்திரமூட்டக்கூடிய வகையில் செயல்படுதலும், ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனம் பொறுக்கமுடியாமல் கொதித்தெழும் மக்களைக் குற்றவாளிகளாக்கிக் கைதுசெய்வதும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் வாடிக்கையாகும் என உள்ளூர் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்திய இஸ்ரேலிய அராஜகம்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை ஹஷ்ரோன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையில் உள்ள நான்கு பலஸ்தீன் பெண் கைதிகளை 'சோதனையிடல்' என்ற பெயரில் நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பலஸ்தீன் பெண்கள் அஹ்ரார் சிறைக் கைதிகளுக்கான கற்கைகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பிடம் தமக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி முறையிட்டுள்ளனர்.

இப் பெண் கைதிகளில் ஒருவரிடம் கைத்தொலைபேசி ஒன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனையிடுவதாகக் கூறிய ஆக்கிரமிப்புக் காவலர்கள், பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தியுள்ளனர். இதன்போது சம்பவ இடத்தில் 10 பெண் காவலர்கள், 5 ஆண்காவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் புலனாய்வுத் துறையினர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைசாலை ஊழியர்கள் இப் பெண்கள் நால்வரையும் தனித்தனியே நிர்வாணப்படுத்தி, 'சோதனை'யிட்டுள்ளனர். இதன்போது சர்வதேச மனித விழுமியங்களுக்கு முற்றிலும் முரணாகத் தாம் பெரிதும் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி மேற்படி பெண்கைதிகள் நால்வரும் மனங்குமுறியுள்ளனர்.

மேற்படி பெண் கைதிகளைச் சோதனையிட்ட பின் அவர்கள், தொழுகைக்கு அணியும் ஆடைகள் மட்டும் அணிவிக்கப்பட்டு அங்கிருந்த விசாரணை அறைக்குள் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கொட்டடி ஆக்கிரமிப்புச் சிறைக்காவலர்களால் அங்குலம் அங்குலமாகச் சோதனையிடப்பட்டது.

இந்தத் 'தேடுதல் வேட்டை' சுமார் 6 மணிநேரம் தொடர்ந்தது. பலஸ்தீன் பெண் கைதிகளின் சிறைக்கொட்டடி தலைகீழாகப் புரட்டப்பட்டு சோதனையிடப்பட்ட போதிலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் குற்றஞ்சாட்டியது போன்ற கைத்தொலைபேசியொன்று அங்கே காணப்படவில்லை.

தேடுதல் வேட்டை இடம்பெற்ற ஆறு மணிநேரமும் மேற்படி பலஸ்தீன் பெண்கள் நால்வரும் உண்ணவோ, தொழவோ, கழிவறைக்குச் செல்லவோ அனுமதியளிக்கப்படவில்லை என்பதும், அவர்கள் மிகக் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளமையும் மிகத் தெளிவான மனித உரிமை மீறலாகும் என அஹ்ரார் அமைப்பின் பணிப்பாளர் ஃபுவாத் அல் குஃப்பாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் பொய்யான குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆண்,பெண், சிறுவர் என்ற வேறுபாடின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் கைதிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படாமலும், தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படாமலும் மிக நீண்ட காலம் பல்வேறு சித்திரவதைகளையும் அவமானங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமச்சீர் கல்வி ரத்து - 200 கோடி இழப்பு யாருடையது: உயர் நீதிமன்றம் கேள்வி!

சமச்சீர் கல்வி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதால் ஏற்படும் 200 கோடி இழப்பு யாருடையது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி விடுத்துள்ளது.

சமச்சீர் கல்வியை ரத்து செய்வதாக தமிழக அரசு கூறியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

சர்ச்சைக்குரியவற்றை நீக்கி நடப்பாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கூடாதா? சமச்சீர் கல்வி நிறுத்திவைக்கும் அரசு முடிவின் உண்மையான நோக்கம் என்ன? சமச்சீர் கல்வி ரத்தால் ஏற்படும் 200 கோடி இழப்பு யாருடையது? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

சமச்சீர் கல்வியின் பாடநூல்கள் உலக தரத்துக்கு இல்லாததால் சமச்சீர் கல்வி நிறுத்தப்பட்டதாக அரசு தரப்பு வாதம் செய்தது.

இதையடுத்து சமச்சீர் வழக்கில் இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழலுக்கெதிரான இயக்கத்தை வகுப்புவாத பாசிச சக்திகளிடமிருந்து விடுவிக்க வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட்

ஊழல் போன்ற பொதுப் பிரச்சினைகளை, சந்தேகத்திர்குரிய சர்ச்சைக்குரிய நபர்கள் மற்றும் வகுப்புவாத ஃபாசிச கும்பல்கள் அவர்களின் மறைமுக செயல்திட்டத்தின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படும் இதுபோன்ற போராட்டங்களின் மூலம் கபளிகரம் செய்வதை குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா கோழிக்கோட்டில் நடைபெற்ற தேசிய செயற்குழுக்கூட்டத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சந்தேகத்திற்குரிய வகையில் சொத்துக்களை பலமடங்கு சேகரித்து குவித்து வைத்துள்ள பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிரான பேராளியாக தன்னைக்காட்டிக் கொள்வது பரிதாபத்திற்குரியது. காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தலைமையில் நடைபெற்ற வெற்றிகரமான போராட்ட்த்தை தொடர்ந்து யோகா வியாபாரியின் திடீர் வருகை ஆர்எஸ்எஸ் பாஜகவின் அரசியல் திட்டத்தின் ஒரு பகுதிதான்.


எனவே ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நலன்கருதி அனைத்து உனர்வுள்ள மனித உரிமை ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும், பாபா ராம்தேவ் தலைமையிலான மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் கேலிக்கூத்தான சத்தியாக்கிரகங்களை ஆதரவளிப்பதை விட்டும் விலகியிருக்க வேண்டும்.

ஆரம்பகட்ட்த்தில் ராம்தேவிடம் மத்திய அரசாங்கம் கருணைகாட்டியதும் பின்னர் வலுக்கட்டாயமாக நடுநிசியில் ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேற்றியதும் தேவையற்றது.

மிக மிக உயர் மட்டத்தில் ஊழலை பிரித்துப்பார்க்க முடியாது தீர்க்கவும் முடியாது. அதற்கு பதிலாக மைய நீரோட்ட அரசியலை தூய்மைப்படுத்த காங்கிரஸ் பாஜக மற்றும் சிபிஐஎம் போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்காமல் மத்தியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்பதையே இப்பிரச்சினைக்கு இறுதித்தீர்வாக மீண்டும் இக்கூட்டம் நினைவுகூர்கிறது.

தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம்: ஜெயலலிதாவிற்கு சீமான் பாராட்டு

மதுரை: தமிழினப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்றும், இலங்கை அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

சிங்கள, பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு கண்ணியமிக்க, சம உரிமையுடைய வாழ்வைப் பெறுவதற்காக கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக போராடி வரும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒரு திருப்பு முனையாகும்.

இத்தீர்மானம் நிறைவேற்ற காரணமாக இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும், தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் நாம் தமிழர் கட்சி இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த மூவர் குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைத் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத இலங்கை அரசிற்கும், அந்த அறிக்கையின் மீது ஆதரவு நிலையெடுக்காத இந்திய அரசிற்கும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானம், தமிழினத்தின் சார்பாக விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான, ராஜதந்திர ரீதியிலான நியாயமான அழுத்தமாகும்.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, ஈழத் தமிழினத்திற்கு எதிரான இலங்கை அரசு இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு ஆதரவுடன் இரண்டரையாண்டுக் காலத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றுள்ளது.

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே அமைத்த கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையத்தின் (Lessons Learnt and Reconciliation Commission – LLRC) முன்னின்று ஈழத்தில் நடந்த மானுடப் பேரழிவு குறித்து தனது சாட்சியத்தை அளித்த மதிப்பிற்குரிய மன்னார் மாவட்டப் பேராயர் ராயப்பு ஜோசஃப் அவர்கள், இந்தப் போருக்கு முன் இருந்த வன்னி பகுதி மக்கள் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், போர் முடிந்த பிறகு வன்னி முள்வேலி முகாம்களுக்கு வந்து சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் குறைவாக உள்ளனர் என்றும், அவர்கள் கொல்லப்பட்டோ அல்லது காணாமல்போய் உள்ளவர்களாகவோ இருக்கலாம் என்றும் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார். உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த உண்மையை இன்று வரை இலங்கை அரசு மறுக்கவில்லை.

ஆனால் இது குறித்து இலங்கை அரசிடம் இந்தியா எந்த கேள்வியும் கேட்கவில்லை. இது இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைக்கு இந்திய அரசு உடந்தையாக நின்றது என்பதற்கான மற்றொரு சான்றாகும்.

இந்திய அரசின் மெளனமே, இலங்கை அரசு திட்டமிட்டுச் செய்த மாபாதகச் செயலை இனப் படுகொலை என்று சர்வதேசம் கூற முன்வராததற்குக் காரணமாகும். எனவே தான், தமிழின அழிப்பு என்பது போர்க் குற்றம் என்ற அளவோடு நி்ற்கிறது.

இந்த நிலையில் தான் தமிழினத்திற்கு எதிராக இலங்கை அரசு போர்க்குற்றம் செய்துள்ளது என்பது நம்பகமான குற்றச்சாற்று என்று ஐ.நா.நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்தது.

அந்த அடிப்படையிலேயே, ராஜபக்சேவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்கக்கோரி தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இனப் படுகொலைப் போர் முடிந்து வன்னி முகாம்களுக்கு வந்த சுமார் 3 லட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தப்படவில்லை.

ஏனெனில் தமிழர்கள் வாழ்ந்த பூமியில் சிங்களர்கள் குடியேற்றம் நடைபெறுகிறது. அவர்களுடைய காணிகள் சிங்களர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களை நிரந்தரமாக ஒடுக்குவதற்கு, அவர்களின் பாரம்பரிய பூமியின் பெரும்பகுதியை இராணுவப் பகுதிகளாக (Cantonments) சிங்கள இனவெறி அரசு அறிவித்துள்ளது.

வாழ்ந்த இல்லங்கள் போரினால் சிதைக்கப்பட்டு, வாழ்க்கைக்கு ஆதாரமான காணிகள் பறிக்கப்பட்டு, பிழைக்க வழியேதுமின்றி, ஈழத் தமிழினம் சிதறடிக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசை மண்டியிடச் செய்ய வேண்டுமெனில், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதே ஒரே வழியாகும்.

அந்த புரிந்துணர்வோடு தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது ராஜதந்திர ரீதியில் மிகச் சாமர்த்தியமான தீர்மானமாகும்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்த தமிழ் மக்கள் எதை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தார்களோ அந்த விஷயத்தை முதல்வர் ஜெயலலிதா அனைத்துக் கட்சிகளின் பேராதரவோடு நிறைவேற்றியுள்ளார்.

இதற்காக தமிழினம் அவருக்கும், தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, இத் தீர்மானம் தமிழினம் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு ஒரு புத்துணர்வை தந்துள்ளது என்பதை நன்றியுடன் நாம் தமிழர் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, காணாமல் போன மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்ததற்கும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறுகிறது.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஓவியர் எம்.எஃப் ஹூசைன் லண்டனில் காலமானார்

இந்துக் கடவுள்களின் உருவங்களை நிர்வாணமாக வரைந்து சர்ச்சையில் சிக்கிய ஓவியர் எம்.எஃப் ஹூசைன் லண்டனில் காலமானார். அவருக்கு வயது 96.

லண்டனில் ராயல் பிராம்டன் மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி 2.30 மணியளவில் அவர் மரணமடைந்தார்.

பத்ம விபூஷண் பட்டம் பெற்றுள்ள ஹூசைன் கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்து கடவுள்களின் உருவங்களை நிர்வாணமாக வரைந்ததால் இந்து அமைப்புகளின் கண்டனத்துக்கு உள்ளானார். பாரத மாதாவின் படத்தையும் நிர்வாணமாக வரைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்பினர் ஹூசைனுக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து கண்காட்சி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்த ஓவியத்தை திரும்பப் பெற்றார். பின்னர் மன்னிப்பும் கோரினார்.

இந்தியாவில் நீதிமன்ற வழக்குகளும், கொலைமிரட்டல்களும் அதிகரித்ததால் 2006-ல் நாட்டைவிட்டு வெளியேறினார். 2010-ம் ஆண்டு அவருக்கு கத்தார் குடியுரிமை வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டார்.

இந்திய நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக இப்போதும் கைது வாரண்டுகள் உள்ளன.

1995-ம் ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது. 1973-ல் பத்ம பூஷண் விருதும், 1991-ல் பத்ம விபூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. 1986-ல் மாநிலங்களவை எம்பியாகவும் நியமிக்கப்பட்டார்.

ச‌ட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌ம்: தி.மு.க. புற‌க்க‌ணி‌ப்பு

பாதுகா‌ப்பு இ‌ல்லாததா‌ல் ச‌ட்ட‌ப்பேரவை கூ‌ட்ட‌த்தை புற‌‌க்க‌ணி‌ப்பதாக ‌தி.மு.க அற‌ி‌வி‌‌வி‌த்து‌ள்ளது.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ‌தி.மு.க உறு‌ப்‌பின‌ர்க‌ள் த‌னி‌‌த்த‌னியாக உ‌ட்கார வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌‌ல் பாதுகா‌ப்பு இ‌ல்லை எ‌ன்று ‌தி.மு.க. ச‌ட்ட‌ப்பேரவை தலைவ‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

‌ஒரே இட‌த்‌தி‌ல் அரை அனும‌தி தர சபாநாயக‌ர் மறு‌‌த்து‌வி‌ட்டதாகவு‌ம் மு.க.ஸ்டா‌லி‌‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

‌தி.மு.க தலைவ‌ர் கருணா‌நி‌தியை ப‌ற்‌றி நே‌ற்று அவை‌யி‌ல் தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் ‌விம‌ர்சன‌‌ம் செ‌ய்த‌ற்கு‌ க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள மு.க.‌ஸ்டா‌லி‌ன், கருணா‌நி‌தி ப‌ற்‌‌றிய ‌விம‌ர்சன‌த்‌தி‌ற்கு ப‌தி‌ல் தர ‌தி.மு.க.வு‌க்கு அனு‌ம‌தி மறு‌‌க்க‌ப்ப‌ட்டதாகவு‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.
இதையும் தேடு: சட்டப்பேரவை கூட்டம் திமுக முகஸ்டாலின்

கச்சத்தீவு வழக்கு‌க்கு வலுசே‌ர்‌க்கவே தீர்மானம்: ஜெயல‌லிதா

இந்திய - இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு க‌‌‌‌ச்ச‌த்‌தீவை தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி தொடர்ந்த வழக்குக்கு வலுசேர்க்கும் விதமாக தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இவ்வழக்கில் சேர்த்துக்கொள்ளும்படி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்ப‌ட்டு‌ள்ளதாக முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

த‌மிழக சட்டப்பேரவையில் இத‌‌ற்கான தீர்மானத்தைக் கொண்டுவந்து அவர் ஆற்றிய உரை‌யி‌ல், தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கச்சத்தீவினை, 1974, 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு தாரை வார்த்ததை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில், அ.இ.தி.மு.க பொதுச் செயலர் என்ற முறையில் என்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பின்வரும் தீர்மானத்தினை இன்று இப்பேரவையில் முன்மொழிகிறேன்.

இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா , இலங்கைக்கு இடையே 1974, 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஒப்பந்தங்கள், சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என 2008ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதாவா‌ல் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறை தன்னை இவ்வழக்கில் சேர்த்துக் கொள்ளும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவை தீர்மானிக்கிறது.

டெல்ஃப் தீவிற்கு தெற்கே 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப்பதற்கும், பிடிபட்ட மீன்களை இன வாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக, தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க தேவாலயம் இந்தத் தீவில் தான் உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும், மார்ச் மாத இறுதியில், வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தத் தீவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். இது போன்ற விழாக் காலத்தில், தொழுகை நடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த கத்தோலிக்க மதகுரு கச்சத்தீவிற்கு செல்வது வழக்கம் என்று வரலாற்று பதிவேடுகள் தெரிவிக்கின்றன.

1972இல் வெளியிடப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடி, அதற்கு முன் ராஜா ராமராவ் வெளியிட்ட ராமநாதபுர மாவட்ட மானுவல், 1915, 1929, 1933ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ராமநாதபுர மாவட்டத்துப் புள்ளிவிவரங்கள் அடங்கிய பின்னிணைப்பு, 1899இல் ஏ.ஜெ. ஸ்டூவர்ட்டு எழுதிய சென்னை ராசதானியிலுள்ள திருநெல்வேலி மாவட்ட மானுவல் போன்ற பல்வேறு ஆதாரங்களைக் கொண்டு வெளியிடப்பட்டது.

அதில், ராமே‌‌ஸ்வரத்திற்கு வட கிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும்; ஜமீன் ஒழிப்புக்கு முன்னர், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும்; இந்தத் தீவின் சர்வே எண் 1250; பரப்பளவு 285.20 ஏக்கர் என்றும்; இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் வட்டத்தில் உள்ள தீவு என்று கச்சத்தீவை அது குறிக்கிறது. இவையெல்லாம், கச்சத்தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன.

இந்த விவரச் சுவடி வெளியிடப்பட்ட போது கருணாநிதி, முதலமை‌ச்சராக இருந்தார். அந்த விவரச் சுவடியில், கச்சத்தீவு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதில் இருந்த வரைபடத்தில் கச்சத்தீவு இந்தியாவின் பகுதி என காண்பிக்கப்படவில்லை. ஆனாலும், இந்த விவரச் சுவடிக்கு 14.6.1972ல் முகவுரை எழுதிய அப்போதைய முதலமை‌ச்சர் கருணாநிதி, அதைப் பற்றி விவரச் சுவடி தயாரித்த அதிகாரிகளிடம் எடுத்துக் கூறாமல் முகவுரை எழுதிக் கொடுத்து விட்டார். இது தான் கச்சத் தீவு மீது கருணாநிதிக்கு இருந்த பற்று.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974ஆம் ஆண்டு, முதலமை‌ச்சராக கருணாநிதி பதவி வகித்த போது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் முதலமை‌ச்சராக இருந்த போது, கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். 15.8.1991, சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்றி வைத்து கச்சத்தீவை மீட்போம் என்று அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இது குறித்து பல முறை மத்திய அரசையும், பிரதமரையும் நேரிலும், கடிதம் மூலமாகவும் வற்புறுத்தி இருக்கிறேன். 16.9.2004 அன்று, நிரந்தரமான குத்தகை என்ற முறையில், தமிழக மீனவர்கள் கச்சத் தீவிற்குச் சென்று மீன்பிடிக்கும் உரிமையை, மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி இருக்கிறேன். இருப்பினும், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் எந்தவித நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

2006ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலையடுத்து தமிழகத்தின் முதலமை‌ச்சராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியிலும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. எந்த மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும், 1974ஆம் ஆண்டு கச்சத்தீவை தாரைவார்த்துக் கொடுத்ததோ, அதே அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பை வகித்தன. ஆனால், கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி, மத்தியில் தி.மு.க. தயவில் காங்கிரஸ் ஆட்சி என்ற நிலை இருந்த போதும் கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கையையோ அல்லது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலை தடுப்பதற்கான நடவடிக்கையையோ, அப்போதைய தி.மு.க. அரசின் முதலம‌ை‌ச்ச‌ர் கருணாநிதி எடுக்கவில்லை. கச்சத்தீவு, இலங்கை அரசுக்கு தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக, இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இதுவரை நூற்றுக்கணக்கான மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.

1960ஆம் ஆண்டுக்கு முன்பு, 1950களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதலமை‌ச்சர் பி.சி.ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும் என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, அதாவது, அன்றைய மேற்கு வங்க முதலமை‌ச்சர் பி.சி. ரா‌யி‌ன் சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத்தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

1974இல் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது குறித்து அன்றைய முதலமை‌ச்சர் கருணாநிதிக்கு தெரியும் என்றும், அதை அவர் ஏன் எதிர்க்கவில்லை என்றும், நான் பல முறை கேள்வி எழுப்பி உள்ளேன். ஆனால், கருணாநிதியோ 1974இல் ஒப்பந்தம் போடுவதற்கு முன்னால் தனக்கு இது பற்றி தெரியாது என்று தான் கூறிக்கொண்டு வருகிறார்.

23.7.1974இல் மாநிலங்களவையில் கே.ஏ.கிருஷ்ணசாமி பேசும் போது, “… I would like to get a clarification in this regard from the Hon. Minister. Just now I heard the views expressed by my Hon’ble friend, Mr. S.S. Mariswamy, D.M.K.,that on the agreement reached between the government of India and the Sri Lanka government the government of Tamil Nadu was not properly informed.

… There are two news items which appeared in the Hindu. One was on June 27. “When pressmen asked the Tamil Nadu Chief Minister Mr. Karunanidhi, for his reaction to the agreement on Kachatheevu, he said he would prefer to wait until after the details had been announced. Mr. Karunanidhi said that Foreign Secretary, Mr. Kewal Singh, had met him last week during his visit to Madras and apprised him on the situation. Mr. Kewal Singh had told him that a favourable condition existed for agreement on Kachatheevu.”

On the 29th June, the Chief Minister stated the following to the Press:-

“It was regrettable that before signing the agreement, the Centre had not invited him or any representative of the State Government for consultation. The Prime Minister had not even chosen to ascertain the views of the leaders of parliament on this vital question”, என்று தெரிவித்து, இதில் எது சரி என்று கேட்கிறார்.

இதற்கு பூபேஷ் குப்தா அவர்கள் we know it for a fact that the State was consulted என்று கூறி உள்ளார்.

இது குறித்து 21.8.1974 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், கச்சத்தீவு குறித்து கொண்டு வரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது, “மத்திய அரசு உங்களோடு ஆலோசனை நடத்தியதா?” என்று ஆலடி அருணா, முன்னாள் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியை கேட்ட போது, கருணாநிதி, “அயலுறவுத் துறைச் செயலர் கேவல் சிங்கை நான் டெல்லியில் சந்தித்த போது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது, தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது. கச்சத்தீவு இந்தியாவுக்கே தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்த போது, இதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னேன்” என்று கூறியுள்ளார். அப்போது, ஆலடி அருணா நாடாளுமன்றத்தில் ஸ்வரண் சிங் பேசியதை எடுத்து சொல்கிறார்.

“… The External Affairs Minister, Shri Swaran Singh said in the Rajya Sabha today that very detailed consultations had been held with Chief Minister of Tamil Nadu Mr. Karunanidhi by the Government of India on the issue of Kachatheevu. The consultations were held at least twice”

அதற்கு விளக்கம் அளித்து, கருணாநிதி, ஸ்வரண் சிங் மேலும் என்ன சொன்னார் என்று குறிப்பிடும் போது, “May I say, because others might pick up -

I would like to say categorically, that we had very detailed consultations with the Chief Minister Shri Karunanidhi of Tamil Nadu, not once, but at least two times.” உடனே ரபிராய் என்ற உறுப்பினர் எழுந்து, “Had he agreed?” என்று சொல்லி, தந்திரமாக தப்பித்துக் கொள்கிறார்.

தந்திரமாக தப்பித்துக் கொண்டது ஸ்வரண் சிங்கோ, மத்திய அரசோ அல்ல. கச்சத்தீவை தாரைவார்க்க துணை போன கருணாநிதி தான் தந்திரமாக தப்பித்துக் கொண்டார்.

முதலில் “கன்சல்டேஷன்” இல்லை, அதாவது ஆலோசனை கேட்கவில்லை என்று சொன்னவர், பின்னர் “கன்சென்ட்” கொடுக்கவில்லை, அதாவது ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறி தப்பித்துக் கொண்டுவிட்டார். கச்சத்தீவை இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்கும் முன்பு, மத்திய அரசு தமிழக அரசிடம் பல முறை விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, என்பது தெரிகிறது. உண்மையிலேயே, கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது, அக்கறை இருந்திருந்தால் இந்திய - இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன்பே, சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார் கருணாநிதி. சட்டமன்ற தீர்மானத்தில் கூட மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தம், "வருத்தம் அளிக்கிறது" என்று தான் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, "எதிர்க்கிறோம்" என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை.

நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியபடி, நான் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் உரிமை நமது மீனவர்களுக்கு கிடைக்காத நிலையில், 2008 ஆம் ஆண்டு அ.இ.அ.‌தி.மு.க. பொதுச் செயலர் என்ற முறையில், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத் தக்கவை அல்ல என்று உத்தரவிட வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தேன். இந்த வழக்கில், மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன்.

இந்த வழக்கு 6.5.2009 அன்று உச்ச நீதிமன்றத்தின் முன்பு விசாரணைக்காக பட்டியல் இடப்பட்ட போது, மீன்வளத் துறை ஆணையரால் தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கையில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதில் ஒரு கருத்தாக, “… uniform stand has to be taken both by the Central and State Governments” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, மத்திய அரசும், மாநில அரசும் ஒரே நிலையை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கிற்கு பத்திவாரி குறிப்புகள் வைத்து, அதற்கு ஒப்புதல் கேட்டு, 10.6.2009 அன்று அன்றைய முதலமை‌ச்சர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்தக் கோப்பினை சட்டத் துறை மூலமாக அனுப்பும்படி முதலமை‌ச்சரின் செயலாளர் 13.7.2009 அன்று திருப்பி விடுகிறார்.

சட்டத் துறை தனது குறிப்பில் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எந்தவித வேண்டுகோளும் வைக்கப்படவில்லை என்றும், தமிழக அரசை ஒரு proforma respondent என்ற அளவில் தான் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்து, மத்திய அரசின் எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட்ட பின் அதையே பின்பற்றலாமா? அல்லது நம்முடைய நிலைப்பாடு பற்றி உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கலாமா? என்பது குறித்து உரிய நேரத்தில், முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. இந்தக் கருத்தை உள்ளடக்கி இந்த நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் உள்ள தமிழக அரசின் Advocate on Record-க்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுற்றோட்டக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தக் குறிப்பிற்கு 14.8.2009-ல் முன்னாள் முதலமை‌ச்சர் கருணாநிதி ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த வழக்கிற்கான பத்திவாரி அறிக்கையில், 1974, 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஷரத்து எண். 8-ன்படி, நாடாளுமன்றத்தின் பின்னேற்பு ஆணை பெறப்படாதது; சட்டத்திற்கு சட்டத் திருத்தம் செய்யப்படாதது குறித்து வாதி எழுப்பிய வினாக்களுக்கு மத்திய அரசு தான் தெளிவுரை வழங்கிட இயலும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கது என்பதே முந்தைய தி.மு.க. அரசின் நிலைப்பாடாக இருந்தது.

கச்சத்தீவை மீட்க வேண்டும்; தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்று, முன்னாள் முதலமை‌ச்சர் கருணாநிதிக்கு உண்மையிலேயே, அக்கறை இருந்திருக்குமானால், என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் உடனே எதிர் உறுதி ஆவணம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க நடவடிக்கை எடுக்க மனம் இல்லாததால் தான், மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்த பின் மாநில அரசு தாக்கல் செய்யலாம் என்று முடிவெடுத்து விட்டார் கருணாநிதி.

1.4.2011 அன்று, 2 மாதங்களுக்கு முன், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்தது. அதில், 1974, 1976 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்றும், என்னுடைய ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

கச்சத்தீவு குறித்த வழக்கில், தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அளிக்க வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்தீர்மானத்துக்கு ஆதரவளித்து ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்களை முதலமை‌ச்ச‌ர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.

குஜராத்: சாலைவிபத்தில் 20 பேர் பலி

ஆமதாபாத், ஜூன்.9: குஜராத்தில் டோல்கா-பகோத்ரா நெடுஞ்சாலையில் சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி ஏறியதில் 20 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பஹ்தியாதில் உள்ள தர்கா ஒன்றுக்கு நடைபயணமாகச் சென்ற பக்தர்கள் டோல்கா-பகோத்ரா நெடுஞ்சாலையில் பேஜ்வா சந்திப்பு அருகே சாலையோரத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக சென்ற லாரி அவர்கள் மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் ஆமதாபாத் வி.எஸ்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரா‌ம்தே‌வ் ‌மீது ச‌ட்ட‌ப்படி நடவ‌டி‌க்கை: சித‌ம்பர‌ம்

இளைஞ‌ர்களு‌க்கு ஆயுத ப‌‌‌யி‌ற்‌சி வழ‌ங்க‌‌ப்போவதாக அ‌றி‌வி‌த்து‌ள்ள யோகா குரு ரா‌ம்தே‌வ் ‌மீது ச‌ட்ட‌ப்படி நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்ச‌ர் ப.‌சித‌ம்பர‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

டெ‌ல்‌லி‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இளைஞ‌‌ர்க‌ள், இள‌ம்பெ‌ண்க‌ள் 11 ஆ‌யிர‌ம் பேரு‌க்கு ஆயுத‌ப் ப‌யி‌ற்‌‌சி வழ‌ங்க‌ப்போவதாக ரா‌ம்தே‌வ் கூ‌றி‌யிரு‌ப்பது க‌ண்டி‌க்க‌த்த‌க்கது எ‌ன்றா‌ர்.

ரா‌ம்தே‌வி‌ன் இதுபோ‌ன்ற பே‌ச்சுக‌ள் அவரது உ‌ள்நோ‌க்க‌ம், உ‌ண்மை ‌நிற‌த்தை வெ‌ளி‌க்கா‌ட்டுவதாகவு‌ம், அ‌றி‌வி‌த்தபடி ரா‌ம்தே‌வ் இளைஞ‌ர்க‌ளு‌க்கு ஆயுத ப‌யி‌ற்‌சி வழ‌ங்கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல் ச‌ட்‌ட‌ம் வேடி‌‌க்கை பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌காது எ‌ன்று அவ‌ர் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

கனிமொழி ஜாமீன் நிராகரிப்பு

தொலை பேசி நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது தொடர்பிலான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழியின் பிணை மனு டில்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதே வழக்கில் கைதாகியுள்ள கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமாரின் பிணை மனுவையும் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பரிஹோக் நிராகரித்தார்.

தொலை தொடர்பு அமைச்சராக ஆ ராசா இருந்த போது அவர் முறைகேடாக அலைக்கற்றைகளை அளித்ததாகவும் அதில் பயன்பெற்ற ஒரு நிறுவனம் கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாயை அளித்துள்ளதாகவும் சிபிஐ கூறுகிறது. இது லஞ்சப் பணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இது வர்த்தக ரீதியான கடன் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த இரண்டு பேருக்கு எதிராக பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இந்த பிணை மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.

தயாநிதி மாறன் ராஜிநாமா செய்ய சுப்ரமணிய சுவாமி கோரிக்கை

சென்னை, ஜூன்.8: தயாநிதி மாறனுக்கு எதிராக 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் புகார் கூறப்பட்டுள்ளதால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிட்டியின் அறிக்கையை குறிப்பிட்டுப் பேசிய சுவாமி, ஏர்செல் விவகாரத்தில் பயனாளிகள் நேரடியாக பலனடையவில்லை. ஆனால் நேரடியாக பலனடைந்தவர்களிடம் இருந்து அந்த நிறுவனம் வாங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தயாநிதி மாறன் தன்னை நிர்பந்தித்ததாக அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சி.சிவசங்கரன் குற்றம்சாட்டியதையடுத்து தயாநிதி மாறன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேக்சிஸ் நிறுவனம் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானது என்று கூறப்படுகிறது.

திமுகவை குறிவைத்து செயல்படுகிறது காங்கிரஸ் எனக் குற்றம்சாட்டிய சுவாமி, அப்போதுதானே அக்கட்சியை கழற்றிவிட்டு எதிர்காலத்தில் அதிமுகவுடன் கூட்டு சேரமுடியும் எனக் குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சரவையில் இருந்து ப.சிதம்பரத்தை நீக்க வேண்டும் என சுவாமி வலியுறுத்தினார். சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு விவகாரத்தில் திடீரென பல்டி அடித்ததில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பிய 50 பயங்கரவாதிகள் பட்டியலில் குளறுபடி என சிதம்பரம் தொடர்ந்து பெருந்தவறுகளைச் செய்துள்ளார் என சுவாமி குற்றம்சாட்டினார்.

பஸ்சுக்குள் கருகி 22 பேர் பலி : விபத்து நடந்தது எப்படி? பஸ் டிரைவர் பேட்டி!

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் உள்பட 22 பேர் பலியாயினர். கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. ஏசி மெஷின் வெடித்து தீப்பிடித்ததில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. பலியான 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று இரவு 8.30 மணிக்கு தூங்கும் வசதி கொண்ட கேபிஎன் டிராவல்ஸ் பஸ் பொள்ளாச்சிக்கு புறப்பட்டது. சேலத்தை சேர்ந்த டிரைவர் நாகராஜன் பஸ்சை ஓட்டினார். பஸ்சில் 7 பெண்கள் உள்பட 23 பேர் பயணம் செய்தனர். இரவு 10.45 மணி அளவில் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே உள்ள அவலூர் என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது பஸ்சுக்கு முன்பு 2 லாரிகள் போட்டி போட்டு சென்றுள்ளன. திடீரென ஒரு லாரி நிலைதடுமாறி, பஸ்சின் பக்கவாட்டில் உரசியது. பஸ் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டில் உரசிக்கொண்டே, அருகில் இருந்த சிறிய பாலத்தின் மீது மோதியது. இதில் முன் சக்கரங்கள் இரண்டும் உடைந்ததால், பாலத்துக்கு கீழே 15 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. அதேநேரம் ஏசி மெஷின் வெடித்ததால் குபீரென்று தீ பிடித்தது. பஸ் முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்தது. பயணிகள் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்ததால் அவர்களால் என்ன நடந்தது என்பதை யூகிக்கக்கூட முடியவில்லை. உயிர் பிழைக்க அவர்கள் பஸ்சுக்குள் அங்கும் இங்கும் ஓடினர். பஸ் இடது பக்கம் சாய்ந்து கிடந்ததால் கதவை திறந்துகொண்டு வெளியே வர முடியவில்லை.

டிரைவர் நாகராஜன் கதவை உடைத்துக்கொண்டு பயணிகளை காப்பாற்ற வெளியே ஓடிவந்தார். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. அதே நேரத்தில் பஸ்சின் பின்னால் அமர்ந்திருந்த கார்த்திகை ராஜா என்ற பயணி, கண்ணாடி உடைந்ததால் வெளியே வந்துவிட்டார். அவர்கள் இருவரும் லேசான காயத்துடன் தப்பினர். 50 அடி உயரத்துக்கு தீ எரிந்ததால் அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்களால் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. பஸ்சுக்குள்ளேயே தீயில் கருகி 22 பயணிகளும் பரிதாபமாக பலியானார்கள். தகவல் அறிந்ததும் காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்களால் எரிந்துகொண்டிருந்த தீயைத்தான் அணைக்க முடிந்தது. அதற்குள் எல்லாமே முடிந்துவிட்டது. அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல்கள் கருகிவிட்டன.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் அமைச்சர் சின்னய்யா, சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஜார்ஜ், வடக்கு மண்டல ஐஜி ரமேஷ் குடாவாலா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்களும் மீட்பு பணியை முடுக்கி விட்டனர்.

உயிர் தப்பிய டிரைவர் நாகராஜன், அதே வழியில் வந்த பஸ்சில் ஏறிச்சென்று வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். உயிர்தப்பிய கார்த்திகை ராஜா காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியானவர்களின் உடல்கள் அனைத்தும் வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.இதற்கிடையே விபத்துக்கு காரணமான 2 லாரிகளின் டிரைவர்களையும் காணவில்லை. அவர்களும் இந்த விபத்தில் காயம் அடைந்திருக்கக் கூடும் என தெரிகிறது. அதனால் ஏதாவது ஒரு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வரலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து லாரி டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இறந்த 22 பேரின் உடல்களும் வாலாஜா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு உறவினர்கள் திரண்டு வந்து கதறி அழுதனர். கருகிய நிலையில் இருந்ததால் உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது.

எனினும் 5 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உதவியாளர் இளங்கோவனின் மருமகன் பொள்ளாச்சியைச் சேர்ந்த டாக்டர் சுப்பிரமணி (29) என்பவரின் உடல் அடையாளம் காணப்பட்டது. அவரது கையில் அணிந்திருந்த பிரேஸ்லெட் மூலம் உறவினர்கள் அடையாளம் கண்டறிந்தனர். பொள்ளாச்சியை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் வெங்கடேசன் (72) உடலும் அடையாளம் காணப்பட்டது. அவரது கழுத்தில் ஒட்டியிருந்த நவரத்தினமாலை, சட்டையில் வைத்திருந்த வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு உறவினர்கள் அடையாளம் கண்டுபிடித்தனர். விபத்தில் உயிர் தப்பிய கார்த்திக் ராஜாவின் மனைவி சுனிதா (32) உடலும் அடையாளம் தெரிந்தது. அவர் அணிந்திருந்த சேலையின் நிறத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கார்த்திக்கின் நண்பர்கள் மாசானமுத்து, பரத் ஆகியோரின் சடலங்களும் அடையாளம் காணப்பட்டது.

விபத்து நடந்தது எப்படி? பஸ் டிரைவர் பேட்டி

பஸ் டிரைவர் நாகராஜன் (51) கூறியது: காவேரிப்பாக்கம் அருகே அவலூரில் வந்தபோது பஸ்சுக்கு முன்னால் இடதுபுறம் ஒரு லாரியும், வலதுபுறம் ஒரு லாரியும் ஜோடியாக சேர்ந்தாற்போல் வேகமாக சென்றுகொண்டு இருந்தன. இதனால் அவற்றை முந்திச்செல்ல ஹாரன் அடித்தேன். வலதுபுறம் சென்ற லாரி முன்னால் செல்ல, அந்த லாரிக்கு பின்னால் இடதுபுறம் சென்ற லாரி சென்று, சாலையில் இடதுபுறமாக பஸ்சுக்கு வழிவிட்டது. அவற்றை முந்திச் செல்ல முயன்றேன். அப்போது எதிர்பாராதவிதமாக லாரிகள் மோதிக் கொண்டன. பின்னால் சென்ற லாரி நிலைதடுமாறி திடீரென இடதுபுறமாக திரும்பியது. பஸ்சின் டீசல் டேங்க் பகுதியில் அந்த லாரி உரசியது. இதில் நிலை தடுமாறிய பஸ், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் பாய்ந்தது. கஷ்டப்பட்டு, பஸ்சை சாலைக்கு திருப்ப முயன்றேன். ஆனால் சாலையோரத்தில் பாலத்தின் தடுப்பு சுவரில் பஸ் மோதி, பள்ளத்தில் இடதுபுறமாக கவிழ்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்தது. பஸ் திகுதிகுவென்று எரிய ஆரம்பித்தது. இடிபாட்டில் சிக்கிக்கொண்ட எனது காலை கஷ்டப்பட்டு எடுத்தேன். பயணிகள் பகுதியில் மரண ஓலம் கேட்டது. பயணிகளை காப்பாற்றுவதற்காக கேபின் கதவை திறக்க முயன்றேன். கதவுகள் நசுங்கியிருந்ததால் திறக்க முடியவில்லை. அதற்குள் தீ பஸ் முழுவதும் வேகமாக பரவி விட்டது. இவ்வாறு டிரைவர் கூறினார்.

காவித் தீவிரவாதம்-பாபா ராம்தேவ் மீது திக் விஜய் சிங் குற்றசாட்டு

பாபா ராம்தேவ் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காவித் தீவிரவாதத்தில் இருந்து மக்களின் கவனத்தை திருப்ப, ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி ஆதரவுடன் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது என்று திக் விஜய் சிங் கூறினார்.

இத்தகைய போராட்டத்தை ஊக்கப்படுத்துவதன் மூலம் ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகள், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இல்லாமலாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அவருக்கு உண்ணாவிரத அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஜெட் விமானத்தில் பறக்கும் பாபா ராம்தேவ் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் எந்தவகையான சத்தியாகிரகம் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியது திக் விஜய்சிங், காவித் தீவிரவாதத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி.யால் திட்டமிடப்பட்டதே இந்த உண்ணாவிரதம் என்றும் திக்விஜய் சிங் கூறினார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையால் பலர் கொல்லப்பட்டுள்ளனர்


ஆக்கிரமிப்பு அரசான இஸ்ரேல் கோலன் குன்று பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை நேற்று முன்தினம் நடத்திய வெறியாட்டத்தில் 23 க்கும் மேற்பட்ட சிரியா நாட்டு பலஸ்தீன ஆதரவாளர்கள் கொல்லப்பட்துள்ளனர் மேலும் 350 பேர் அளவில் காயமடைந்தனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அல்குத்ஸ் – பைத்துல் முகத்தஸ் – இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு 44 ஆண்டுகள் பூர்த்தியை நினைவு கூறும் முகமாக நேற்று அரபு முஸ்லிம் நாடுகளிலும் ஏனைய பல நாடுகளையும் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆர்பாட்டங்கள் பேரணிகள் , கண்ட கூட்டங்கள் என்பன நடைபெற்றுள்ளது

பலஸ்தீன் வாலிபர் அமைப்பு -The Muslim Youth Association- நாடு பூராவும் போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை நடாத்துமாறு பலஸ்தீன மக்களை கோரியிருந்தது நேற்று ஜூன் மாதம் 6 ஆம் திகதி பலஸ்தீன் கிழக்கு ஜெருசலத்தில் அமைந்துள்ள அல் குத்ஸ் – பைத்துல் முகத்தஸ்- முஸ்லிம் உம்மாஹ்வின் முதல் கிப்லா, விரிவாக Video ஜெருசலம், மேற்கு கரை ஆகியன 1967 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது

கோலன் ஹைட்ஸ் பகுதியை 1967 ஆம் ஆண்டு சிரியாவிடம் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளை தமது காணிகளையும் வீடுகளையும் பறிகொடுத்த மக்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு எல்லையில் ஒன்றுதிரண்டு பலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பியதோடு தமது ஆக்கிரமித்த காணிகளை தமக்கு தருமாறு கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் போது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை இவர்கள் மீது வெறியாட்டம் நடாத்தியுள்ளது இதன்போதே இவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்

தமது நிலத்தையும் வீடுகளையும் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களை நோக்கி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை அந்த மக்களை விலகி போகுமாறு மிரட்டியுள்ளது , தமது காணிகளுக்கு போக முயன்றவர்களை எல்லையை மீறி வரவேண்டாம் என்றும் அவ்வாறு வந்தால் கொல்லப்படுவீர்கள் என்றும் ஒலிபெருக்கி மூலம் மிரட்டியுள்ளது ஆனால் அந்த மிரட்டலையும் மீறி காணிகளை பறிகொடுத்த மக்கள ஆக்கிரமிப்பு எல்லைக்குள் நுழைய முயன்றபோது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை அவர்களில் மீது கொலை தாண்டவம் ஆடியுள்ளது இதில் புதைத்து வைக்கபட்டுள்ள கன்னி வெடியில் சிக்கியும் , துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்

அதேவேளை சிரியாவில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களை மறைக்கவே சிரியா அரசு இவ்வாறான செயலில் ஈடுபடுவதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையின் பேச்சாளர் அவிடால் லைலோவிக் தெரிவித்துள்ளார் கொல்லப்பட்டவர்கள் 10 பேர் என்றும் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் 13 முகாம்களில் சுமார் 5 இலட்சம் பலஸ்தீனர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிரியாவில் கடந்த மாதமும் சட்டவிரோத இஸ்ரேல் இஸ்தாபிக்கப்பட்டு 63 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இஸ்ரேல் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற ஆர்பட்டன்க்ளில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் கொல்லப்பட்ட தினத்தை பலஸ்தீன் காஸா நிர்வாகம் நேற்று துக்க நாளாக அறிவித்துள்ளது.

ஏர்செல்லை விற்க தயாநிதி மாறன் கட்டாயப்படுத்தினார் : சிவசங்கரன் பரபரப்பு புகார்

புது தில்லி : ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் ராசா, கனிமொழி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் பெயர் பரபரப்பாக அடிபடுகிறது. இச்சூழலில் ஏர்செல்லை தனக்கு வேண்டியவர்களுக்கு விற்க மாறன் சகோதரர்கள் கட்டாயப்படுத்தினர் என்று சி.பி.ஐயில் மாறனுக்கு எதிராக ஏர்செல்லின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஏர்செல்லை நிறுவிய சிவசங்கரன் மலேசியாவைச் சார்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்றார். அது தொடர்பாகவும் 2 ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாகவும் சில சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவதற்காக சி.பி.ஐ சிவசங்கரனை அழைத்திருந்தது. அதனடிப்படையில் சிவசங்கரன் புதுதில்லியின் அடையாளப்படுத்தப்படாத இடத்தில் வாக்குமூலம் அளித்ததாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சிவா குழுமத்தை நடத்தி வரும் சிவசங்கரன் தொலைதொடர்பு, கட்டுமானம், ஷிப்பிங், மின்சாரம் மற்றும் கணினி கல்வி போன்றவற்றில் முதலீடு செய்துள்ளார். ஏர்செல்லில் தனக்குள்ள பங்கை மலேசியாவைச் சார்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்கச் சொல்லி தயாநிதி மாறன் கட்டாயப்படுத்தியதாகவும், அதை தான் மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

பின் வேண்டுமென்றே ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் வழங்காமல் தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த போது இழுத்தடித்ததால் வேறு வழியின்றி மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் சிவசங்கரன். மேக்ஸிஸ் நிறுவனர் மாறன் சகோதரர்களுக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிமெண்ட் ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டும்: கட்டட தொழிலாளர்கள் சங்கம் வேண்டுகோள்

கேபிள் டிவியை போல சிமெண்ட் ஆலைகளையும் அரசுடைமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மு. பன்னீர்செல்வம் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

கட்டுமான தொழிலாளர்களுக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் நல வாரியம் அமைக்கப்பட்டது. அந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கான நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். மணல் கொள்ளைகள் அதிக அளவில் நடைபெறுவதால் மணல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சிமெண்ட் விலையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற மணல் கொள்ளைகளில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

மேலும் தங்களின் விருப்பத்துக்கேற்ப சிமெண்ட் விலையை ஆலை அதிபர்கள் உயர்த்துகின்றனர். இதனால் கட்டுமானத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே கேபிள் டிவியை அரசுடைமையாக்குவது போல சிமெண்ட் ஆலைகளை அரசுடைமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கும், விவசாய நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ. 500 ஓய்வூதியத் தொகையாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனை ரூ. 1000-ஆக உயர்த்த வேண்டும்.

அதே போல விபத்தில் இறக்க நேரிடும் க ட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தொகையான ரூ. 1 லட்சத்தை உயர்த்தி ரூ. 2 லட்சமாகவும், இயற்கை மரணத்துக்கு வழங்கப்படும் தொகையை ரூ. 50 ஆயிரமாகவும் உயர்த்த வேண்டும் என்றார் அவர்.

அகில இந்திய கட்டட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் தலைவர் ஆர். ராமகிருஷ்ணன், பொருளாளர் இ. பரமானந்தம், இளைஞரணித் தலைவர் பி. கோபிநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More