உங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க முக்கியமான 3 இலவச மென்பொருள்கள்


நாம் இணையத்தில் உலாவரும் போது நம்மை அறியாமலே சில மால்வேர்கள் நம் கணினியில் புகுந்து கொண்டு கணினியின் வேகத்தை குறைப்பதோடு நாளடைவில் நம் கணினியை செயலியக்க செய்து விடுகிறது. மற்றும் நம் கணினியின் ரகசிய தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி விடுகிறது. நாம் இணையத்தில் இருந்து ஏதேனும் டவுன்லோட் செய்து சில தேவையில்லாத பைல்களும் நம் கணியில் சேமிக்க படுகிறது. இதனாலும் நம் கணினி பாதிக்க படுகிறது. நீங்கள் எந்த ஆன்டி வைரஸ் உபயோகித்தாலும் அதை ஏமாற்றி விட்டு இவைகள் நம் கணினியில் புகுந்து கொள்கின்றன. ஆகவே இந்த பைல்களை நம் கணினியில் இருந்து எப்படி நீக்குவது என்று இங்கு காண்போம்.

1.Advance System Care Free 3.7.3
இந்த அபாயமான பைல்களை நம் கணினியில் இருந்து முற்றிலும் நீக்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது அதும் இலவசமாக. இந்த மென்பொருளில் நம்முடைய கணினியின் பிரச்சினைக்குரிய பைல்களை கண்டறிந்து முற்றிலுமாக நீக்கு கிறது. இந்த அருமையான மென்பொருள் இலவசமாக கிடைப்பது ஆச்சரியமே. இந்த மென்பொருளில் Spyware, malware, Junk files ஆகியவைகளை முற்றிலுமாக நம் கணினியில் இருந்து நீக்குகிறது. இந்த மென்பொருள் நாம் நீக்கும் பைல்கள் தானாகவே பேக்கப் எடுத்து வைத்து கொள்வதால் நமக்கு தேவைபட்டால் திரும்பவும் அதை நிறுவி கொள்ளலாம்.



மென்பொருளை டவுன்லோட் செய்ய 

2. Ccleaner v3.02
இந்த மென்பொருளை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஏற்க்கனவே மூன்றுமுறை இந்த மென்பொருளை பற்றிய பதிவை இந்த தளத்திலேயே போட்டு இருக்கேன். நம்மில் பெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் மிகவும் பயனுள்ள மென்பொருள். நம்முடைய கணினியின் தேவையில்லாத பைல்களை நொடியில் கண்டறிந்து அனைத்தையும் நீக்கி விடும். உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமான மென்பொருள் இது. 


இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 

3. Wise Registry Cleaner Free 5.91
நம்முடைய கணினியில் சில மென்பொருட்களை நாம் நிறுவுவோம். பின்னர் இந்த மென்பொருளின் செயல்பாடு பிடிக்காமல் இதை நீக்கி விடுவோம். இப்படி நீக்கும் போது நம்முடைய கணினியில் உள்ள registryல் அந்த மென்பொருளின் பைல்கள் நீங்காமல் அப்படியே பதிந்து விடும். இதனால் நம் கணினியின் வேகம் மிகவும் பாதிக்க படுகிறது. இந்த பைல்களை நீக்க அருமையான இலவசமென்பொருள் தான் இந்த மென்பொருள். மேலே உள்ள இரண்டு மென்பொருளில் இந்த வசதி இருந்தாலும் யாரும் அந்த மென்பொருட்களை பயன்படுத்தி registry சுத்தம் செய்ய வேண்டாம். இதற்கென்று பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ள இத மென்பொருளை பயன்படுத்தவும். 
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய 

டிஸ்கி: இங்கு நான் கொடுத்துள்ள அனைத்து மென்பொருட்களும் லேட்டஸ்ட் பதிப்பு ஆகும். ஆகவே தற்போது தங்களிடம் இவைகளின் பழைய பதிப்பு இருந்தால் இந்த புதிய பதிப்பை டவுன்லோட் செய்து மாற்றி கொள்ளுங்கள். 

பேராசிரியர் கைவெட்டு சம்பவம்: 27 பேர் மீது குற்றப்பத்திரிகை

கொச்சி,ஜன.15:நபி(ஸல்..) அவர்களை அவமதித்து வினாத்தாள் தயாரித்த தொடுபுழா நியூமென் கல்லூரி பேராசிரியர் டி.ஜெ.ஜோசப்பின் கை வெட்டப்பட்ட வழக்கில் 27 பேர் மீது குற்றம் சுமத்தி போலீசார் நேற்று குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தனர்.

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 54 பேர்களில் மீதமுள்ளவர்கள் தலைமறைவாக உள்ளதால் 27 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 600 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது சட்டவிரோத செயல் தடுப்புச்சட்டம், குற்றம் நிகழ்த்துவதற்கான சதித்திட்டம், கொலை முயற்சி, கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், வெடிப்பொருள் சட்டம், சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துவது உள்பட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வழக்கில் 255 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 200 முதல் 255 வரையிலான சாட்சிகள் போலீஸ்காரர்களாவர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

மஸ்ஜித் இடிப்பைக் கண்டித்து டெல்லியில் இன்று பந்த்

புதுடெல்லி,ஜன.14:நிஸாமுத்தீன் ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகே அமைந்திருந்த மஸ்ஜித் நூரை இடித்துத் தள்ளிய டெல்லி வளர்ச்சி ஆணையத்தை(டி.டி.எ) கண்டித்து டெல்லியில் இன்று முஸ்லிம் அமைப்புகள் முழுஅடைப்புக்கு அழைப்புவிடுத்துள்ளன.

இன்று டெல்லி இமாம் செய்யத் அஹ்மத் புஹாரியின் தலைமையில் மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ஜும்ஆ தொழுகை நடைபெறும்.

இடிக்கப்பட்ட மஸ்ஜிதை உடனடியாக கட்டவேண்டுமெனவும், போலீஸ் அடக்குமுறையைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் எனக்கோரியும் இந்த முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

மஸ்ஜித் இடித்த இடத்தை டி.டி.ஏ விடமிருந்து பெற்று மீண்டும் மஸ்ஜித் கட்டுவதற்கு ஒப்படைக்கப்படும் என தன்னைக் காணவந்த முஸ்லிம் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்.

முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துவார்கள். அதேவேளையில், மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடமும், அதன் சுற்றுவட்டாரமும் வக்ஃப் போர்டுக்கு சொந்தமானது எனவும், அதற்கான ஆதாரங்கள் தங்கள் வசமிருப்பதாகவும் டெல்லி வக்ஃபோர்டு தெரிவித்துள்ளது.

இதுத் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாகவும் அறிவித்துள்ளது.

ஏராளமான முஸ்லிம் தலைவர்கள் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நிஸாமுத்தீன் போலீஸ் நிலையத்திற்கு முன்பு உள்ளூர் மக்களின் கண்டனப் போராட்டம் தொடர்கிறது.

ஜங்க்புரா எம்.எல்.ஏ தர்வீந்தர் சிங்கின் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. 



 
ஆனால், மோதல் சூழலை தணிக்கும் விதமாக நேற்று அஸர் மற்றும் மஃரிப் தொழுகைகளை நிறைவேற்ற மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் உள்ளூர்வாசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More