சமச்சீர் கல்வி ரத்து - 200 கோடி இழப்பு யாருடையது: உயர் நீதிமன்றம் கேள்வி!

சமச்சீர் கல்வி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதால் ஏற்படும் 200 கோடி இழப்பு யாருடையது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி விடுத்துள்ளது.

சமச்சீர் கல்வியை ரத்து செய்வதாக தமிழக அரசு கூறியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

சர்ச்சைக்குரியவற்றை நீக்கி நடப்பாண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கூடாதா? சமச்சீர் கல்வி நிறுத்திவைக்கும் அரசு முடிவின் உண்மையான நோக்கம் என்ன? சமச்சீர் கல்வி ரத்தால் ஏற்படும் 200 கோடி இழப்பு யாருடையது? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்.

சமச்சீர் கல்வியின் பாடநூல்கள் உலக தரத்துக்கு இல்லாததால் சமச்சீர் கல்வி நிறுத்தப்பட்டதாக அரசு தரப்பு வாதம் செய்தது.

இதையடுத்து சமச்சீர் வழக்கில் இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More