காவித் தீவிரவாதம்-பாபா ராம்தேவ் மீது திக் விஜய் சிங் குற்றசாட்டு
ராம்தேவ் மூலமாக மத்தியில் காவி ஆட்சியைக் கொண்டு வர சதி நடக்கிறது-கி.வீரமணி
25 வயதுக்கு கீழ் மது அருந்தினால் அபராதம்
இந்த கூட்டத்தில், 25 வயதுக்குட்பட்டோர் மது பானம் வாங்குவதும், குடிப்பதும் சட்டவிரோதமான குற்றம் என்னும் அரசின் புதிய முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் பீர் வாங்குவதற்கும், பருகுவதற்கும் வயது வரம்பு 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொது விழாக்களில், நிகழ்ச்சிகளில் மதுபானங்கள் பரிமாறவும் அரசு தடை விதித்து விட்டது. இனி 25 வயதுக்குட்பட்டோர் மராட்டியத்தில் மதுபானங்கள் பருகினால் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் கல்வி நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள், நெடுஞ்சாலைகளுக்கு ஒரு கி.மீ. தொலைவில் மதுக்கடைகள் இருக்க அனுமதி இல்லை. ஒரு மாநகராட்சி வார்டு பகுதியில் மதுக்கடையை மூடுமாறு அதில் குடியிருப்போரில் 25 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மூடிவிட வேண்டும்.
தனி நபர் வாங்குகிற மது பாட்டில்களின் அளவுக்கும் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.
மதுபானங்கள் வாங்குவதற்கும், பருகுவதற்கும் 25 வயது ஆகி இருக்க வேண்டும் என்ற வரம்பு டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் அமலில் உள்ளது. இப்போது மராட்டியமும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீன் ஆசிரியையை எரித்துக் கொல்லமுயன்ற யூத ஆக்கிரமிப்பாளர்கள்

யூத ஆக்கிரமிப்பாளர் குழுக்கள் பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தும் சந்தர்ப்பங்களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையும் ஆக்கிரமிப்புக் காவல்துறையும் அவற்றைக் கண்டும் காணாமல் விட்டுவிடுவதோடு, தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காகப் பலஸ்தீனர்கள் எதிர்த்தாக்குதல்கள் நடாத்தும் பட்சத்தில் அவர்களைக் கைதுசெய்யவும் தயங்குவதில்லை. இதனால், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் அடிக்கடி மோதல்கள் வெடித்தபடி உள்ளன என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
SDPI சார்பாக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த மாணவனுக்கு வாழ்த்து

அஸ்ஸாம்:ரிஹாப் மறுவாழ்வு கிராமம் திறப்பு…

2010 ஆண்டு முதல் 1200 பலஸ்தீன் சிறுவர்கள் கைது

இந்தக் கைது நடவடிக்கைகள் பலஸ்தீன் இளந் தலைமுறையினரை அச்சுறுத்தும் நோக்கிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது என அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும்! SDPI !!
பெங்களூரு: SDPI கட்சியின் புதிதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய தலைவர் இ அபுபக்கர் அவர்கள் தேசிய பிரதிநிதிகள் கவுன்சிலில் ஆற்றிய உரை.SDPI அமைத்திருக்கும் இந்த அரசியல் தளம் முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் உட்பட நாட்டில் வாழும் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் அளவிற்கு விசாலமானது.
புதிய பூகோளத்தை வடிவமைத்திருக்கிறோம் அதற்கு எல்லைகள் உண்டு. இந்த பூகோள எல்லையில் ஹிந்துக்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பார்சீக்கள், ஆதிவாசிகள், தலித்துகள், மற்றும் பிற இந்தியர்களுக்கு உரிய பிரதிந்தித்துவம் உண்டு.
வரையறுக்கப்பட்ட இந்த புதிய பூகோளத்தில் புதிய சரித்திரம் படைக்கவிருக்கிறோம்.
இந்த புதிய சரித்திரம் படைக்க நமது கட்டமைப்பை மீளாய்வு செய்வதும் அவசியம். இந்த புதிய சிறிய கட்சி 21 மாநிலங்களில் செயல்வீரர்களைக் கொண்டுள்ளது.
11 மாநிலங்களில் மாநில அளவிலான கமிட்டிகளைக்கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது பெருமை படத்தக்கது. நமது இலக்கு ஒரு வருடத்தில் 200000 செயல்வீரர்களைச் சேர்ப்பது. இந்த இலக்கை நாம் அடையவில்லை மிக மெத்தனமான போக்கை கடைபிடித்துள்ளோம்.
இந்த 21 ஆம் நூற்றாண்டிற்கான நவீன அரசியல் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் உருவெடுத்துள்ளோம். இது தொடர்பாக எந்த முன்மாதிரியும் நமக்கில்லை. இந்த புதிய சிந்தனைக்கு நாமே முன்னோடி.
புதிய உலகில் போராட்ட களத்தை மட்டுமே நாம் கொண்டிருக்கிறோம். அரசியலின் கிழிந்த பக்கத்திலிருந்து நாம் காப்பியடிப்பதில்லை. சுத்தமான கரும்பலகையில் முதல் எழுத்தை எழுததயராயிருக்கிறோம்.
இந்த கட்சி தனிநபர் துதிபாடும் கட்சியல்ல. தனிநபர் இங்கு முக்கியமல்ல. தலைமையேற்று வழிநடத்தும் பண்புதான் இங்கு மிக முக்கியம். நம்மிடையே தேர்ந்தெடுக்கும்போது நாட்டின் வருங்கால தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நமக்கு சவாலாக, நமக்கெதிராக பலர் திரும்பியுள்ளனர், மதச்சார்பின்மை மற்றும் போலி மதச்சார்பின்மை பேசுவோர், தலித்து ஆளும் வர்க்கம் இதுபோன்று முஸ்லிம் கட்சிகளும் நமக்கெதிராக திரும்பியுள்ளனர். பாஜகவும், கம்யூனிஸ்டுகளும் நமக்கு எதிராக உள்ளனர்.
ஒரு சிறிய சம்பவத்தை சாக்காக வைத்து கொண்டு SDPI கட்சியின் 100 க்கும் மேற்பட்ட அலுவலங்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நமது தலைவர்கள் மிரட்டப்பட்டனர். RSS போன்ற வகுப்புவாத சக்திகளால் நமது செயல் வீரர்கள் தாக்கப்பட்டனர். ஆனால் நான் சத்தியமிட்டு சொல்கிறேன் நம் இயக்கத்தை எவராலும் தடுக்க முடியாது.
நண்பர்களே, இந்த அரசியல் கட்சிக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்புகள் என்று ஆச்சர்யப்படலாம். காரணம் மிக எளிமையானது. மற்ற பிற அரசியல் கட்சிகள் சிறியதோ அல்லது பெரியதோ இடதுசாரியோ அல்லது வலதுசாரியோ அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்தன்மையுடன் உருவானது தான் சோசியல் டெமாக்ரெடிக் பார்டி ஆஃப் இந்தியா.
ஆட்சியாளர்களின் அம்மணத்தை அம்பலப்படுத்தும் திராணியுள்ள பச்சைக்குழந்தையின் வெள்ளை மனதுடன்,”அதுவல்ல, இது தான் பாதை” என்று சுட்டிக்காட்டும் கட்சி இது. இதுபோன்ற குணநலங்கள் உள்ளவர்கள் வரலாறு நெடுகிலும் எதிர்ப்பையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளனர். வரலாறும் இவர்களுக்குத்தான் சொந்தம்.
அடிமைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட சமுதாயங்களின் இளைஞர்களின் கோபாவேசத்தை அளவிட தெரியாதவர்கள் அரசியல் உருவாக்கத்தை நம்ப மறுக்கிறவர்களிடமிருந்து எதிர்ப்பு வரத்தான் செய்யும். அவர்களை நாம் உதாசினம் செய்யலாம் அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
இதற்காக நீங்கள் தயாராக இருங்கள் நாங்களும் தயாராகவே இருக்கிறோம். எஸ்டிபிஐ வெறும் அரசியல் கட்சியல்ல. இது ஒரு மிஷன். மக்களின் ஆழ்ந்த துயரத்திற்கு மத்தியில் அவர்களின் உள்ளக்கிடக்கையின் மனசாட்சியின் வெளிப்பாடு இது. இதுபோன்ற இயக்கங்கள் தான் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்.
நான் ஏற்கெனவே கூறியுள்ளது போல நமது நாட்டிற்காக புதிய வரலாறு படைக்க புதிய பூகோளத்தை வரையறுத்திருக்கிறோம். நாம் இதில் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நிகழ்காலத்தின் அர்பணிப்பு ஒளிமயமான எதிர்காலத்திற்காக.
இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் : தென்காசி கருத்தரங்கம்
நம்மை சீரமைப்போம் என்கிற தலைப்பில் ஜாஃபர் அலி உஸ்மானி அவர்கள் தனி மனித ஒழுக்கத்தின் அவசியம் குறித்தும் அவை செம்மையாக சீராக பேணப்படாமல் விட்டுவிடப்பட்டால் சீரழிந்து போய்விடும் என்பதை தக்க உதாரணத்துடன் விளக்கினார். ஒரு விவசாய நிலம் முறையாக உழுது களையெடுக்கப்பட்டு நீர் பாசனத்தை சரியான தருணத்தில் பாய்ச்சி கண்ணும் கருத்துமாக உரமிட்டு பயிரிட்டு அருவடை செய்தால் தான் அந்த விவசாயிக்கு எதிர்பார்த்த பலனைத்தரும் அதே போல குழந்தைகளையும் சீரும் சிறப்புமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அடுத்து பேசிய ஹாஜா இமாம் சமூகத்தை சீரமைப்போம் என்ற தலைப்பில் பேசினார். இந்தியாவில் தலித்துகளும் பெண்கள் சமூகமும் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் கொடுமைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள் என்று புள்ளிவிபரங்களுடன் சுட்டி காட்டினார். முஸ்லிம் சமூகமும் பல்வேறு ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவதையும் விவரித்தார். ஒரு தீமை நடைபெறக்கண்டால் கரங்களால் தடுக்க வேண்டும் அல்லது மிக மிக குறைந்த பட்சம் மனதால் வெறுக்க வேண்டும் அவரே நம்பிக்கையில் குறைந்த தரத்தில் உள்ளவர் என்ற நபிமொழியை சுட்டிக்காட்டி இறைத்தூதர் அவர்கள் தீமையை தடுப்பதை இறைநம்பிக்கையோடு தொடர்பு படுத்தி சொன்னதை விளக்கினார். முஸ்லிம் சமூகத்தைப் போலவே பல்வேறு சமுதாயங்கள் பாதிப்புள்ளாக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் அந்நிய முதலாளிகளிடம் தாரைவார்க்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நாட்டில் ஊழல் லஞ்சம் கொலை கற்பழிப்பு போன்ற குற்றங்கள் பெருகியுள்ளது. இது போன்ற குற்றங்களை தடுக்கவேண்டும். அவ்வாறு தடுப்பதற்கான முழு பொறுப்பும் முஸ்லிம் சமுதாயமான நம்மிடத்தில்தான் உள்ளது. நீங்கள்தான் சிறந்த சமூகம் ஏனெனில் நீங்கள்தான் நன்மையை ஏவி தீமையை தடுக்கிறீர்கள் என்று குர்ஆனிலிருந்து வசனங்களை கோடிட்டு காட்டி பேசினார். எனவே சமூகத்தை புனரமைப்பது நமது கடமை என்று குறிப்பிட்டார்.
இறுதியாக சிறப்புப் பேருறையாற்றிய சோசியல் டெமாக்ரடிப் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் செய்யது இபுறாஹிம் அவர்கள் குடும்பத்தை புனரமைப்போம் என்ற தலைப்பில் சிந்தனையைத்தூண்டும் விதத்தில் அனைவருக்கும் எளிமையாக விளங்கும் வகையில் பேசினார்.
மேற்கத்திய கலாச்சாரத்தில் குடும்ப அமைப்புமுறை சீரழிந்து போய்விட்டது. அமெரிக்கா சந்தித்த மிகப்பெரிய சரிசெய்ய முடியாத பாதிப்பு இது என்பதை தக்க உதாரணத்துடன் விளக்கினார். அமெரிக்க மக்கள் வாழ்க்கை முறையில் குடும்ப அமைப்பு முறை இல்லாத காரணத்தால் தறுதலையான அநாதையான குழந்தைகள் ஏராளமாக உருவாக்கப்பட்டு அவை மன உழைச்சலுக்குள்ளாகி பல துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்று வருகிறது என்பதை பத்திரிக்கை செய்தி வாயிலாக அறிய முடிகிறது.
குடும்பம் என்பது ஒரு பல்கலைக்கழகமாக திகழவேண்டும். குடும்பம் என்பது ஒரு கல்விச்சாலையாக, கலாச்சார மையமாக, நிவாரண மையமாக, பாதுகாப்பு மையமாக, புத்துயிரூட்டும் மையமாக திகழவேண்டும் என்று குறிப்பிட்டார்.
குழந்தைகளிடம் இருக்கும் சில பிரச்சினைகள் பற்றி குழந்தை நல அல்லது மனோதத்துவ நிபுணரிடம் அலோசனை பெற நாம் சென்றால் அவர்கள் பெற்றோர்களிடம் சொல்லும் ஆலோசனைகளில் ஒன்று குழந்தைகள் முன்னிலையில் கணவன் மனைவி ஆகிய இருவரும் ஒருபோதும் சண்டையிட்டுக்கொள்ளாதீர்கள் என்பது தான். கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டு சண்டையிட்டுக்கொள்வதால் அவை பிஞ்சு மனதில் நஞ்சாக பதிவாகிறது. நாம் அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதை விட அவர்கள் நம்முடைய நடவடிக்கைகளை கவனித்து நிறைய கற்றுக்கொள்கிறார்கள். எனவே வீட்டின் சூழலை கல்வி கற்கும் கலாச்சாலையாக செம்மையானதாக மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும்.
கலாச்சாரத்திற்கு ஒரு உதாரணமாக உடைக்கலாச்சாரத்தை எடுத்துகொண்டு குழந்தைகளிடம் எவ்வாறு அது மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கினார். சிறு வயதில் சுமார் மூன்று வயது குழந்தைக்கு நவீன கலாச்சாரம் என்ற பெயரில் அரைகுறை ஆடையை அணிவிக்கிறோம். இது சிறு குழந்தை தானே அதில் எந்த தவறும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். என்றாலும் அந்த ஆடை அணிந்தபோது அனைவரின் பாராட்டையும் பெற்ற இக்குழந்தை வளர்ந்து விட்ட பிறகு கண்ணியமான ஆடை அணியும்போது பிற ஆண்களால் தான் கவரப்படவில்லை என்பதை உணரும்போது கவலையடைகிறாள். ஆழ்மனதில் பதிந்த பிறரை கவர்ந்து பாரட்டுப்பெற வேண்டும் என்ற உணர்வுதான் மிகைக்கும் இதனால் கண்ணியமான ஆடை, முடிவெடுக்கத்தெரியாத விடலைப்பருவத்தில் இவர்களின் வெறுப்புக்கு உள்ளாகிறது. எனவே சிறு குழந்தைப்பருவம் முதற்கொண்டு நமது குடும்பம் ஒரு கலாச்சார மையமாக திகழுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
நிகழ்ச்சியை புதிய தேசம் இணையதள பத்திரிக்கை ஆசிரியர் காதிர் அலி அவர்கள் தொகுத்து வளங்கினார். நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் ஜாஃபர் அலி உஸ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்.





