கல்லூரி மாணவிகள் 500 பேர் சஸ்பெண்ட்

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி மாணவிகள் 500பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சியில் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஹோலி கிராஸ் கல்லூரியும் ஒன்று. இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

சமீபத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வந்தது. இதனால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனையொட்டி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

பொங்கல் விடுமுறை முடிந்து கடந்த 18- ம் தேதி கல்லூரி திறக்கப்பட்டது. ஆனால் விடுதி மாணவிகள் 300 பேர் மற்றும் ரெகுலர் மாணவிகள் 200 பேர் அன்றைய தினம் வரவில்லை என்று கூறப்படுகின்றது. ஜனவரி 19-ம் தேதி தான் பெரும்பாலான மாணவிகள் வந்ததாகவும், அதில் சிலர் உடம்பு சரியில்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.

மாணவிகளின் காரணங்களை நம்பாத கல்லூரி நிர்வாகம் 18-ம் தேதி கல்லூரிக்கு வராத 500 மாணவிகளையும் 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்தோடு, ரூ 1000 அபராதமும் விதித்துள்ளது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் கல்லூரி முதல்வர் சற்குணாவோ அபராதம் எல்லாம் விதிக்கவில்லை, வரும் 24-ம் தேதிக்குள் பெற்றோர்களை அழைத்து வர மட்டும் தான் சொல்லியிருக்கிறோம் என்றார்.

கூண்டோடு 500 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பற்றி அறிந்த திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் நிர்மலா கல்லூரி நிர்வாகத்தினை கண்டித்துள்ளார். மேலும், ஒரு நாள் வராததற்காக 5 நாட்கள் சஸ்பெண்ட் கூடாது. உடனே மாணவிகளை கல்லூரியில் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

செய்தி:thatstamil.oneindia.in

நான்கு மாத குழந்தையின் வயிற்றுக்குள் ஒரு குழந்தை: ஆச்சர்யப்படுத்தும் உண்மை!

பிறந்து நான்கு மாதமே ஆன, ஒரு ஆண் குழந்தையின் வயிற்றுக்குள் முழு வளர்ச்சியடையாத குழந்தை ஒன்று இருந்த சம்பவமானது, எழும்பூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, ஒரு கிராமத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்பெண்ணிற்கு ஏற்கனவே, இரண்டறை வயதில் ஒரு குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பிறந்த இந்த குழந்தை பிறந்ததிலிருந்தே, மூச்சு திணறல், சளி, வயிறு வீக்கம், சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் போன்ற பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் உடல்நிலை குறித்து, திருவண்ணாமலை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் அவ்வப்போது, பரிசோதனை செய்து வந்தனர்.

மருத்துவர்களும் சாதாரண சளி பிரச்சனை தான் என்று கூறி, மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கி வந்தனர். இருப்பினும், குழந்தையின் வயிறு வீக்கம் சரியாகாமல் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து, கடந்த 10ம் திகதி எழும்பூர் அரசு மருத்துவனைக்கு குழந்தையை அழைத்துச் சென்றனர். குழந்தைகள் அறுவை சிகிச்சை பேராசிரியர் மாதவன் தலைமையில் மருத்துவர்கள், முத்துக்குமார், சரவணன், பூர்ணிமா ஆகியோர் பரிசோதனை செய்தனர். இந்த குழந்தைக்கு, சிறுநீரக பகுதியில் நீர்கட்டியாக இருக்கலாம் அல்லது புற்றுநோய் கட்டியாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

ஆனால், பரிசோதனையில் எந்த நோயும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தையின் வயிற்றுப் பகுதியை அறுவை சிகிச்சை செய்து பார்க்க, மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். அப்போது, வயிற்றுக்குள் 14 செ.மீ நீளமும், 12 செ.மீ அகலமும் உடைய பெரிய அளவிலான நீர்க்கட்டி ஒன்று சூழ்ந்திருந்தது. அதில் ஒரு லிட்டர் தண்ணீர் தேங்கி இருந்தது என்பது தெரிய வந்தது.

அந்த நீரை வெளியேற்றி பார்த்த போது, முழுவளர்ச்சியடையாத தலை, தலையில் முடி, கை விரல் பகுதி, எலும்பு தண்டுவடம் என்று ஒரு குழந்தை போன்ற கரு இருந்தது. அதை வெளியில் எடுத்த மருத்துவர்கள் எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொண்டனர்.

எக்ஸ்ரே பரிசோதனைக்கு பின்பு, அது குழந்தையின் மண்டை ஓடு தான் என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

குழந்தையின் வயிற்றுக்குள் இருந்த கருவை அகற்றி விட்டதால், இனி குழந்தைக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும், குழந்தையின் வயிற்றில் இருந்த கருவை பரிசோதனைக்காக, ஆய்வு கூடத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஒரு குழந்தையின் வயிற்றுக்குள் இன்னொரு குழந்தை இருப்பது போன்ற ஆச்சர்யமான சம்பவம் ஏற்கனவே, 15 வருடங்களுக்கு முன்பு, எழும்பூர் அரசு மருத்துவமனையில் நடந்து உள்ளது என்று மருத்துவர் முத்துக்குமார் கூறினார். மேலும், ஐந்து லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இது போன்று நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தி:newindianews.com

ஜெருசலத்தை யூதர்களிடம் அடகு வைக்கமாட்டோம் - யு.ஏ.இ

 


அபுதாபி,ஜன.21:ஜெருசலத்தை யூதர்களிடம் அடகுவைக்க ஒருபோதும் முஸ்லிம்களால் இயலாது என யு.ஏ.இயின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸய்யத் அல் நஹ்யான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய நாடுகளுக்கான கூட்டமைப்பான ஒ.ஐ.சியின் இண்டர் பார்லிமெண்ட் யூனியனில் ஷேக் கலீஃபாவின் உரையை யு.ஏ.இ சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ராஸல்கைமா ஆட்சியாளருமான ஷேக் ஸவூத் பின் ஸகர் அல்காஸிமி வாசித்தார்.

ஜெருசலத்திற்கு தூதரகத்தை மாற்றுவது இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும். இத்தகைய முயற்சிகளை நடத்தும் நாடுகள் மீது யு.ஏ.இ நிர்பந்தம் அளிக்கும்.

1967-ஆம் ஆண்டு நடந்த போரில் இஸ்ரேல் அபகரித்த கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பிரதேசங்கள் ஃபலஸ்தீனுக்கு சொந்தமானது என்ற ஓ.ஐ.சியைப் போலவே யு.ஏ.இயும் அங்கீகரித்துள்ளது.

சர்வதேச சட்டத்தின்படி இது முஸ்லிம்களுக்கு சொந்தமானது. இந்த சட்டத்தை காற்றில் பறத்திவிட்டு இஸ்ரேல் ஜெருசலத்தில் யூதர்களை குடியமர்த்தி வருகிறது. ஐக்கியநாடுகள் சபை ஃபலஸ்தீனை சுதந்திரநாடாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஃபலஸ்தீனில் குறிப்பாக காஸ்ஸா முனையில் இஸ்ரேல் நடத்தும் அட்டூழியத்தை ஒ.ஐ.சி பார்லிமெண்ட் கண்டித்தது. காஸ்ஸாவில் ஏராளமான நிரபராதிகளை கொன்றுகுவித்த இஸ்ரேல் அதிகாரிகளை போர் குற்றவாளிகளாக அறிவித்து விசாரணைச் செய்யவேண்டும்.

இஸ்லாத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கும் (இஸ்லாமோ ஃபோபியா) மேற்கத்திய நாடுகளுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள ஒ.ஐ.சியிடம் யு.ஏ.இ கோரிக்கை விடுத்தது. ஒ.ஐ.சியின் இண்டர் பார்லிமெண்ட் கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கியது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

திருக்குர்ஆன் பிரதிகளை எரிக்க அழைப்புவிடுத்த டெர்ரி ஜோன்ஸிற்கு பிரிட்டனில் தடை

லண்டன்,ஜன.21:திருக்குர்ஆனின் பிரதிகளை எரிக்க அழைப்புவிடுத்த அமெரிக்காவில் கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸிற்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

பொதுநலத்தை கவனத்தில் கொண்டு பிரிட்டனில் நுழைய டெர்ரி ஜோன்ஸிற்கு தடை விதித்துள்ளதாக பிரிட்டனின் உள்துறை அமைச்சக அலுவலகம் அறிவித்துள்ளது.

மில்டன் கெய்ன்ஸில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று ஏற்பாடுச் செய்துள்ள நிகழ்ச்சியில் உரை நிகழ்த்த டெர்ரி ஜோன்ஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பிரிட்டன் அரசு எல்லாவகை தீவிரவாதங்களையும் எதிர்ப்பதால் டெர்ரி ஜோன்ஸிற்கு தடை விதித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரிட்டனின் தீர்மானத்திற்கெதிராக நீதிமன்றத்தை அணுகப் போவதாக ஜோன்ஸ் அறிவித்துள்ளார்.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

நான் கடந்து வந்த மதங்கள் பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உரை



நான் கடந்து வந்த மதங்கள் பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) உரை

 


செய்தி:tmmk.in

இராமநாதபுரம் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரம்,ஜன.21:தமிழக அரசு சார்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டு அதற்கான முன்பதிவு 19/01/2011 முதல் 24/01/2011 வரை அனைத்து மாவட்ட ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. 

 
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, மற்றும் பட்டதாரிகள் பலர் பங்குபெற்றனர். இவ்வேலைவாய்ப்பு முகாமுக்கான முன்பதிவு நடைபெறும் இடங்களான இராமநாதபுரம், திருவாடனை, திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்களம், பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, நயினார்கோயில், போகலூர், கடலாடி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

வேலைவாய்ப்பு முகாமுக்கான நேர்முக தேர்வு வருகின்ற 28/01/2011 அன்று கீழக்கரை முஹம்மது சதக் பொறியற் கல்லூரியில் நடைபெறவிருக்கிறது.
தூது நிரூபர்.இராம்நாட்

பெண் தீவிரவாதி பிரக்யாசிங்கிடம் என்.ஐ.ஏ விசாரணை

புதுடெல்லி,ஜன:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக சி.பி.ஐ-யால் கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளைக் குறித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்திருந்தார்.

அதில், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பிற்கு சுனில் ஜோஷிதான் முக்கிய சூத்திரதாரி என தெரிவித்திருந்தார். சுனில்ஜோஷி கடந்த 2009 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். ரகசியம் கசியாமலிருக்க ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள்தான் சுனில் ஜோஷியை கொலைச் செய்தனர் என கருதப்படுகிறது.

இந்நிலையில், 2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட ஹிந்துத்துவா பெண் தீவிரவாதி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் 2003 ஆம் ஆண்டு சுனில்ஜோஷியை தனக்கு அறிமுகப்படுத்தினார் என அஸிமானந்தா தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் கூறியிருந்ததைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு ஏஜன்சி முடிவுச் செய்துள்ளது.

இவ்விசாரணையின் போது சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் பிரக்யா சிங்கின் பங்கினைக் குறித்து என்.ஐ.ஏ கேள்வி எழுப்பும் எனத் தெரிகிறது.
 
செய்தி:twocircles.net

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம்: மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது - உச்சநீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி,ஜன.20:வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணம் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

வரி ஏய்ப்பு என்றுமட்டும் இதனை காணக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் எனக்கோரி மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பி.சுதர்ஸன் ரெட்டி, நீதிபதி எஸ்.எஸ்.நிஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கை விசாரித்தது. இவ்வழக்கை பரிசீலிக்கும் வேளையில்தான் உச்சநீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது.

கறுப்புப் பணத்தை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கையை மேற்கொண்டது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு விபரங்களை சேகரித்து வருவதாகவும், கணக்கு விபரங்களை வெளியிடுவது நாடுகளுக்கிடையேயான நட்புறவை பாதிக்கும் என தெரிவித்தார்.

லீக்டென்ஸ்டைன் நாட்டு வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் 26 பேர் குறித்து மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜெர்மனியுடன் இரட்டை வரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் பெயர் விபரங்களை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் முத்திரை வைக்கப்பட்ட உறையில் இது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தியர்களின் எல்லா வெளிநாட்டு வங்கிகளின் முதலீடு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம் குறித்த விபரங்களை அளிக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டதற்கு ஒரு வங்கியின் விபரங்களை மட்டும் அளித்த மத்திய அரசின் நடவடிக்கையையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

பாகிஸ்தானில் பலத்த பூகம்பம்

இஸ்லாமாபாத்,ஜன.20:பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான தல்பந்தினில் பலத்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 80 கிலோமீட்டர் ஆழத்தில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதால் அதிக அளவில் சேதமில்லை.

ஆப்கான், ஈரான் எல்லைப் பிரதேசத்தில்தான் பூகம்பம் உருவாகியுள்ளது. 84 கிலோமீட்டர் தொலைவு வரை பூகம்பம் உணரப்பட்டதாக அமெரிக்க ஜியோலஜிக்கல் சர்வே தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி டெல்லி, ராஜஸ்தான், அரியானா, உ.பியின் மேற்கு பகுதி, துபாய், கத்தர் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது. ஆனால் சேதங்கள் ஏற்படவில்லை. பூகம்பர் உருவான இடத்தின் 55 கி.மீ சுற்றளவு தூரத்தில் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

டெல்லியில் இடிக்கப்பட்ட மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் வக்ஃப்போர்டுக்கு சொந்தமானது - அரசு கெஜட்

டெல்லி,ஜன.19:டெல்லி ஜங்புராவில் நிஸாமுத்தீன் ரெயில்வே ஸ்டேசனுக்கு அருகில் நிலைப்பெற்றிருந்த மஸ்ஜித் அல் நூர் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டது எனக் கூறி திடீரென டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்துத் தள்ளியது. ஆனால் மஸ்ஜித் இருந்த 350 சதுரமீட்டர் இடம் வக்ஃபோர்டுக்கு சொந்தமான அடக்கஸ்தலமாக 1975 ஆம் ஆண்டு பதிவுச் செய்யப்பட்டுளது என அரசு குறிப்பில்(கெஜட்) காணப்படுகிறது. 
 மேலும் 1947-48 ஆம் ஆண்டைய ஜமாபந்தியிலும் (நில உரிமைத் தொடர்பான விபரங்களை பாதுகாக்கும் ஆவணம்) இவ்விபரம் காணப்படுகிறது.

டெல்லி உயர்நீதிமன்றம் மஸ்ஜிதை இடித்துத்தள்ள அனுமதி வழங்கவில்லை மாறாக லெஃப்டினண்ட் கவர்னருடைய அலுவலகத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் மத விவகார கமிட்டிதான் மஸ்ஜிதை இடிக்க அனுமதி வழங்கியுள்ளது.

இதுத் தொடர்பாக மத விவகார கமிட்டிக் கூட்டிய கூட்டத்தின் நிகழ்ச்சிநிரலை கேட்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்படி ஜக்காத் ஃப்வுண்டேசன் ஆஃப் இந்தியாவின் சார்பில் மனு அளிக்கப்பட்ட போதிலும் இதுவரை வழங்கப்படவில்லை.

யார் யாரெல்லாம் இக்கமிட்டியில் உறுப்பினர்கள் என்பதைக்கூட டெல்லி மாநில அரசு வெளியிடவில்லை. இத்தகையதொரு மர்மம் நீடிக்கும் வேளையில்தான் கடந்த 12-ஆம் தேதி மஸ்ஜித் அல் நூர் அநியாயமாக இடித்துத் தள்ளப்பட்டது.

ஜங்புரா ரெஸிடண்ட்ஸ் வெல்ஃபெயர் அசோசியேசன் கடந்த 2006 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின்(மனு எண்.9358) அடிப்படையில் உயர்நீதிமன்றம் இவ்விவகாரத்தில் தலையிட்டது. இவ்விடத்திலுள்ள மஸ்ஜித் உள்பட சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்கள் மற்றும் குவிந்துகிடக்கும் மணல் மேட்டையும் அகற்றிவிட்டு அவ்விடத்தை பசுமையான பகுதியாக மாற்றவேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.

கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி வளர்ச்சி ஆணையம்(டி.டி.எ) இப்பகுதியிலுள்ள சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்துத் தள்ளிவிட்டு அல் நூர் மஸ்ஜித் மற்றும் வால்மீகி கோயில் விஷயத்தில் தீர்மானம் எடுக்கும் பொறுப்பை மதவிவகார கமிட்டியிடம் ஒப்படைத்தது.

2007-ஆம் ஆண்டு ஜனவரியில் டெல்லி உயர்நீதிமன்றம் அப்பகுதியின் வளர்ச்சிக் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள டெல்லி மாநகராட்சி மற்றும் டெல்லி வளர்ச்சி ஆணையத்திற்கும் உத்தரவிட்டது.

2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி உயர்நீதிமன்ற உத்தரவின்படி சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்களையும், குவிந்துக் கிடந்த மணலையும் அப்புறப்படுத்தியதாக டெல்லி மாநகராட்சி தெரிவித்தது. ஆனால், மஸ்ஜித் உள்பட அனைத்து சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்களையும் அப்புறப்படுத்த வேண்டுமெனக்கோரி மீண்டும் ஜங்புரா ரெஸிடண்ட்ஸ் வெல்ஃபெயர் அசோசியேசன் 2008 ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியது.

எல்லா சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்களையும் அப்புறப்படுத்த வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 2008 ஜூலை 9-ஆம் தேதி உத்தரவிட்டது.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கூடிய மதவிவகார கமிட்டி அல் மஸ்ஜிதை இடிக்கவும், வால்மீகி கோயில் இருந்த இடத்தை கோயிலுக்காக ஒதுக்கவும் சிபாரிசுச் செய்தது. இதனடிப்படையில்தான் மஸ்ஜிதை இடித்துத் தள்ளுவதற்கான நடவடிக்கைகளை டி.டி.எ மேற்கொண்டது.

2009 ஆகஸ்ட் மாதம் முதல் இதற்கான முயற்சிகளை டி.டி.எ மேற்க்கொண்டு வருகிறது. ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு மூலம் மஸ்ஜிதை டி.டி.எவால் இடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து ஜங்புரா ரெஸிடண்ட்ஸ் வெல்ஃபெயர் அசோசியேசன் டெல்லி மாநகராட்சி மற்றும் டெல்லி வளர்ச்சி ஆணையத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுத்தது.

மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் வக்ஃபோர்டுக்கு சொந்தமானது எனக் கூறி அதற்கான ஆவணங்களை 2010 அக்டோபர் 26-ஆம் தேதி டி.டி.எவிடம் அளித்திருந்தது. ஆனால், இதனை பரிசீலிக்காமல் மஸ்ஜிதை இடித்துத் தள்ளியுள்ளது டி.டி.எ. பின்னர் அனைத்து சட்டத்திற்கு புறம்பான கட்டிடங்களையும் இடித்துத் தள்ளியதால் தங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ்பெற வேண்டுமெனக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளது டி.டி.எ.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

அஸிமானந்தாவின் மனமாற்றத்திற்கு காரணமான அப்துல் கலீம் ஜாமீனில் விடுதலை

ஹைதராபாத்,ஜன:ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிரபராதியான அப்துல் கலீமுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக தீவிரவாதி என முத்திரைக்குத்தப்பட்டு போலீசாரால் பொய்வழக்கில் சிக்கவைக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்களில் அப்துல் கலீமும் ஒருவர்.

மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்தியதில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானது.

இதனைத் தொடர்ந்து இக்குண்டுவெடிப்புக்கு காரணமான முக்கிய குற்றவாளி அஸிமானந்தா கடந்த வருடம் நவம்பர் மாதம் சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அஸிமானந்தா ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

எதிர்பாராத விதமாக அச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த இதே வழக்கில் கைதுச் செய்யப்பட்ட அப்துல் கலீம், அஸிமானந்தாவுக்கு சேவைபுரிய நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்துல் கலீமின் நன்னடத்தை மற்றும் போலி வழக்கில் அவர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை அறிந்துக்கொண்ட அஸிமானந்தா மனம் மாறி சி.பி.ஐ நீதிமன்றத்தில் குண்டுவெடிப்புகளில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலத்தை அளித்தார்.

இதனைத் தொடர்ந்து நாடுமுழுவதும் பல்வேறு அமைப்புகள் போலி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை உடனடியாக விடுதலைச் செய்யவும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெறவும் மத்திய, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை வலியுறுத்தின.

இதனைத் தொடர்ந்து நேற்று (ஜனவரி 17-ஆம் தேதி) அப்துல் கலீமுக்கு ரங்கா ரெட்டி நீதிமன்றம் ரூ.20 ஆயிரம் பிணைத் தொகையை ஈடாக வைத்து அப்துல் கலீமுக்கு ஜாமீன் வழங்கியது.

கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல்கலீம் மருத்துவக்கல்லூரி மாணவராவார். குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 18 மாதங்களாக அவர் தனது படிப்பை தொடர முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அப்துல் கலீம் போலீசாரால் ஒரு ரகசியமான பண்ணை வீட்டில் வைத்து சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார். ஒன்றரை வருடங்கள் கழித்து விடுதலையான அப்துல்கலீம் மீண்டும் செல்ஃபோனை சிறையிலிருந்த ஷேக் அப்துல் காதர் என்பவருக்கு அளித்ததாக குற்றஞ்சாட்டி கைதுச் செய்யப்பட்டார்.

ஜாமீனில் வெளிவந்த அப்துல் கலீம் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "நான் பல மாதங்களாக மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை என்னுடன் சிறையிலிருந்த ஒருவர் அஸிமானந்தாவிடம் கூறியுள்ளார். உடனே அவர் என்னை சந்தித்து பேசவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர்தான் அவரைப் பற்றி எனக்கு தெரியவந்தது. அவர் நான் தங்கியிருந்த அறைக்கு அருகில்தான் தங்கவைக்கப்பட்டிருந்தார். அஸிமானந்தா வேறு பெரிய நபர்களின் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என நான் கருதுகிறேன். நான் அவரிடம், என்னை போலீசார் கைதுச் செய்து சித்திரவதைக்கு உள்ளாக்கியது மற்றும் இரண்டுமுறை நார்கோடிக் அனாலிசிஸ்(உண்மைக் கண்டறியும் சோதனை) சோதனைக்கு உட்படுத்தியது ஆகியவற்றைத் தெரிவித்தேன். மேலும் நான் அவருக்கு தண்ணீர் பிடித்துக் கொடுப்பது உள்பட சில சேவைகளை புரிந்தேன். மேலும் அவர் சொல்வதை அமைதியாக கேட்டேன். இவையெல்லாம் அவருடைய மனதை தொட்டது. இதனால் அவருக்கு ஒரு தாக்கம் ஏற்பட்டது." இவ்வாறு அப்துல் கலீம் தெரிவித்தார்.

செய்தி: twocircles.net

மலேசியா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் பதாவி உள்பட 7 பேருக்கு மன்னர் ஃபைஸல் விருது

ஜித்தா,ஜன.19:சவூதி அரேபியாவின் மிகப்பெரிய விருதான மன்னர் ஃபைஸல் விருதுக்கு இவ்வாண்டு மலேசியாவின் முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் பதாவி உள்பட 7 பேர் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.


மன்னர் ஃபைஸல் விருதுக்கு தகுதியுடைய நபர்களை தேர்வுச் செய்வதற்காக சவூதி அரேபியாவின் விமானம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரும், இளவரசருமான அமீர் சுல்தானின் தலைமையில் கூடிய கமிட்டி சமூக சேவகரும், கவிஞருமான அப்துல்லாஹ் பதாவியை இஸ்லாமிய சேவைக்கான விருதுக்கு தேர்வுச் செய்தது.

இஸ்லாமிய ஆய்வுக்குரிய விருது துருக்கியைச் சார்ந்த கலீல் இப்ராஹீமும், ஜோர்டானில் முஹம்மது அத்னான் பக்‌ஷித் அல் ஸய்யாபும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவத்துறையில் சிறந்த பங்களிப்பை செய்த அமெரிக்காவின் பேராசிரியர் ஜேம்ஸ் அலெக்ஸாண்டர் மற்றும் ஜப்பான் நாட்டு பேராசிரியர் ஷின்யா யமனகாவும் தேர்வுச் செய்யப்பட்டனர்.

அறிவியல் துறையில் இம்முறை வேதியியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அமெரிக்க பேராசிரியர்கள் ஜார்ஜ் எம்.வைட்ஸைட் மற்றும் ரிச்சார்டு நீல் ஷேர் ஆகியோர் தேர்வுச் செய்யப்பட்டனர். அரபு இலக்கியத்துறையில் எவரும் போதிய பங்களிப்பை செய்யாததால் இம்முறை அத்துறைக்கான விருது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
செய்தி:மாத்யமம்

மஸ்ஜிதை கட்டும் ஹிந்து சமுதாய வர்த்தகர்

தோஹா,ஜன.18:சமுதாய நல்லிணக்கம் அதிகரிப்பதற்காக கத்தரை தலைமையிடமாக் கொண்டு செயல்படும் ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்த வர்த்தகரான சி.கே.மேனன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மஸ்ஜித் ஒன்றை கட்டவிருக்கிறார்.

1200 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ஹிந்து மதத்தைச் சார்ந்த நபர் கேரளாவில் முஸ்லிம்கள் இறைவனுக்கு வணக்கங்களை நிறைவேற்றும் மஸ்ஜிதை கட்டவிருக்கிறார் என சி.கே.மேனன் பெருமிதத்தோடு குறிப்பிடுகிறார்.

இரண்டு மாதத்திற்குள் மஸ்ஜித் கட்டும் பணி பூர்த்தியாகும். 400க்கும் அதிகமானோர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் மஸ்ஜித் கட்டப்படும். இதற்கு முன்பு எட்டாம் நூற்றாண்டில் சேர மன்னன் ராம வர்மா குலசேகரன் கட்டிய சேரமான மஸ்ஜித் தான் இதற்கு முன்பு ஹிந்து சமுதாயத்தைச் சார்ந்தவரால் கட்டப்பட்டது என சி.கே.மேனன் குறிப்பிடுகிறார்.

கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பெஹ்ஸாத் க்ரூப் ஆஃப் கம்பெனியின் சேர்மன் மற்றும் மேனஜிங் டைரக்டராக செயல்பட்டு வருகிறார் சி.கே.மேனன்.

மஸ்ஜிதை கட்டுவதற்குரிய அனுமதியை முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் முஸ்லிம் சமுதாய தலைவர்களிடமிருந்து பெறப்பட்டதாகவும் சி.கே.மேனன் தெரிவிக்கிறார். இதுத் தொடர்பாக முஸ்லிம் தலைவர்கள், மார்க்க அறிஞர்கள் ஆகியோரிடமிருந்து கடிதங்கள் கிடைத்துள்ளன. அவர்கள் இதில் திருப்தியை தெரிவித்துள்ளனர்.

மஸ்ஜிதின் கட்டுமானப்பணி பூர்த்தியானால் அடுத்ததாக கிறிஸ்தவ சர்ச் ஒன்றைக் கட்டப்போவதாக சி.கே.மேனன் அறிவித்துள்ளார்.

கடந்த 2006-ஆம் ஆண்டிற்கான பிரவாசி பாரதீய விருதும், 2007 ஆம் ஆண்டில் சமூக சேவைக்கான பத்மஸ்ரீ விருதும் சி.கே.மேனனுக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சுவிஸ் வங்கி ஆவணங்கள் விக்கிலீக்ஸ் வசம்

லண்டன்,ஜன.18: 2ஆயிரத்திற்கும் அதிகமான பிரமுகர்களின் சுவிஸ் வங்கிக் கணக்குகளை அவ்வங்கியின் முன்னாள் அதிகாரியொருவர் விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அஸான்ஜேவிடம் ஒப்படைத்துள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூலியஸ் பெயர் என்ற சுவிஸ் வங்கியிலிருந்து வெளியேற்றப்பட்ட ருடோல்ஃப் எல்மர் லண்டனில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து 2 டிஸ்க்குகளில் அடங்கிய ஆவணங்களை ஜூலியன் அஸான்ஜேவிடம் ஒப்படைத்தார்.

ஆவணங்களை பரிசோதித்த பிறகு அனைத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிடும் என அஸான்ஜே உறுதியளித்தார். வங்கி ரகசிய சட்டங்களை மீறியதற்காக வருகிற புதன்கிழமை எல்மர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.

பன்னாட்டு நிறுவனங்கள், பொருளாதார ஸ்தாபனங்கள், பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி உள்பட உலகின் பல்வேறு நாடுகள் ஆகியவற்றிலுள்ள கோடீஸ்வரர்களின் கணக்கு விபரங்கள் இந்த ஆவணங்களில் அடங்கியுள்ளன என சுவிஸ் நாட்டு பத்திரிகையான டெர் ஸோண்டாக் கூறுகிறது.

இந்தியர்களின் விபரங்கள் இதில் அடங்கியுள்ளனவா? என்பது தெரியவில்லை. கறுப்புப் பணத்தை மறைத்துவைக்க இந்தியாவில் அரசியல்வாதிகள் உள்பட ஏராளமானோர் சுவிஸ் வங்கியை பயன்படுத்துவது உண்டு.

கடந்த 1990 ஆம் ஆண்டிற்கும் 2009 க்கும் இடையிலான விபரங்கள் விக்கிலீக்ஸிற்கு கிடைத்துள்ளது. ஆவணங்களை பரிசோதிக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது அதன் அளவைப் பொறுத்தது என தெரிவித்த அஸான்ஜே இதற்காக துறை சார்ந்த வல்லுநர்களின் உதவியை பெறப்படும் என தெரிவித்தார்.

ஜூலியஸ் பெயர் வங்கியிலிருந்து ஏற்கனவே எல்மர் வெளியிட்ட ஆவணங்கள் வரி ஏய்ப்பு மற்றும் இதர பொருளாதார குற்றங்களை வெளிப்படுத்தியிருந்தது. சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை மிக ரகசியமாக பாதுகாப்பதற்காக தனியாக ஒரு நெட்வொர்க்கே செயல்படுகிறது என ஜூலியஸ் பெயரின் முன்னாள் சீஃப் ஆபரேட்டிங் அதிகாரியான எல்மர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

சுவிஸ் வங்கி சட்டங்களை மீறியதற்காக ஏற்கனவே 30 தினங்கள் சிறைத் தண்டனை அனுபவித்திருந்தார் எல்மர். தனது வாயை மூடுவதற்காக பெருந்தொகையை அன்பளிப்பாக தருவதாகவும், வழக்கை வாபஸ் பெறப் போவதாகவும் ஆசைவார்த்தைகள் கூறப்பட்டன என எல்மர் தெரிவிக்கிறார்.
 
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

துபாய்:சிறுமியை வன்புணர்வுச்செய்த இந்தியர்கள் 3 பேர் கைது

துபாய்,ஜன.16:பள்ளிக்கூடம் செல்லும் பேருந்தில் வைத்து 4 வயது சிறுமியை வன்புணர்வுச் செய்த காம வெறிப்பிடித்த 3 இந்தியர்களை துபாய் போலீஸ் கைதுச் செய்துள்ளது.

துபாய் நாத்-அல்-ஷீபாவில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் இந்தியாவைச் சார்ந்த சிறுமி கல்வி பயின்று வந்துள்ளார். ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் உடைகளை அவரது தாயார் மாற்றியபொழுது இரத்தக்கறை இருப்பதைக் கண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அல்வாஸல் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார் அவரது தாயார். பின்னர் என்னவோ ஏதோ என பயந்து இந்தியாவுக்கு செல்ல முடிவெடுத்து அங்கு சென்று தனியார் மருத்துவமனையில் சிறுமியை காண்பித்துள்ளனர். அப்பொழுது டாக்டர், சிறுமியை பரிசோதித்துவிட்டு, சிறுமி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன் பிறகு இந்தியாவிலிருந்து திரும்பிய சிறுமியின் தாயார் பர்துபாய் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி பள்ளி சென்று வந்த பஸ்ஸின் ஓட்டுநர், க்ளீனர், அட்டெண்டர் ஆகியோர்தான் வெறிப்பிடித்து இத்தகைய அக்கிரமமான குற்றத்தை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைதுச் செய்து விசாரணை நடத்தியதில் மூன்று பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த காம வெறிபிடித்தவர்கள் மேலும் எவரையேனும் இத்தகைய பாதக செயலுக்கு ஆட்படுத்தியுள்ளனரா? என்பதுக் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த பாதகச் செயலை நடத்தியவர்கள் சமூகத்தின் வைரஸ்கள் என துபாய் போலீஸ் தலைவர் தாஹி கல்பான் அல் தமீமி தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கூட நிர்வாகிகள் இந்த தவறு நிகழ்ந்ததற்கு காரணமான பொறுப்பிலிருந்து தப்பிக்கவியலாது. ஒரு பெண் பணியாளரை பேருந்தில் நியமிக்காதது பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகும். இத்தகைய சம்பவங்கள் நிகழாதிருக்க சம்பந்தப்பட்டவர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தாஹி கல்பான் தெரிவித்தார்.

இச்சம்பவத்திற்கு காரணம் பள்ளிக்கூட நிர்வாகிகள்தான் என துபாய் போலீஸ் துணைத்தலைவர் மேஜர் ஜெனரல் கமீஸ் மதார் தெரிவித்துள்ளார். சிறுமிகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல 3 ஆண் பணியாளர்களை நியமித்தது அறிவுக்கு பொருந்தாது என அவர் தெரிவித்தார். இத்தகைய சம்பவங்கள் நிகழும்பொழுது உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்குமாறு துபாய் போலீஸ் குற்றவியல் புலனாய்வு தலைவர் மேஜர் கலீல் இப்ராஹீம் அல் மன்சூரி தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More