மாஸ்கோ விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு: 31 பேர் மரணம்

மாஸ்கோ,ஜன.25:ரஷ்ய தலைநகரமான மாஸ்கோவில் டோமோதேடோவோ சர்வதேச விமானநிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 31 பேர் கொல்லப்பட்டனர். 130 பேருக்கு காயமேற்பட்டதாக கருதப்படுகிறது.

உடலில் குண்டை கட்டிக்கொண்டு வந்த நபர் நெரிசல் மிகுந்த விமானநிலையத்தில் வைத்து சுயமாக குண்டை வெடிக்க வைத்தார் என ரஷ்ய செய்தி நிறுவனமான ஆர்.ஐ.எ நொவோஸ்தி கூறுகிறது.

மாஸ்கோ நகரத்திலிருந்து 40.கிலோமீட்டர் தொலைவில் டோமோதேடோவோ விமானநிலையம் உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மாஸ்கோ மெட்ரோ ரெயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 80க்கும் மேற்பட்டோருக்கு காயமேற்பட்டது. 2 பெண்கள் அத்தாக்குதலை நடத்தினர் எனக் கூறப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கோத்ரா ரெயில் எரிப்பு:௦ அடுத்த மாதம் 19-ஆம் தேதி தீர்ப்பு



அஹ்மதாபாத்,ஜன.25: 58 பேருடைய மரணத்திற்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் அடுத்தமாதம் 19-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது.

இந்த ரயில் எரிப்புச் சம்பவத்தில் 58 பயணிகள் உயிரிழந்தனர். குஜராத்தில் 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கோத்ரா எனுமிடம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 58 பயணிகள் உயிரிழந்தனர். இந்த ரெயில் எரிப்புக்கு முஸ்லிம்கள் மீது குற்றஞ்சாட்டி ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொடூரமாக படுகொலைச் செய்து கோரதாண்டவமாடினர்.

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கு தொடர்பான இரு தரப்பு வாதங்களையும் கடந்த ஆண்டு செப்டம்பரிலேயே கேட்டு முடித்துவிட்டார் நீதிபதி பி.ஆர்.படேல். ஆனால் தீர்ப்பு வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஜே.எம்.பாஞ்சால் தெரிவித்திருந்தார்.

பின்னர் இந்த தடை அக்டோபர் 26-ம் தேதி விலக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் சபர்மதி சிறையில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 2002-ம் ஆண்டு 94 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அனைவர் மீதும் கொலைக்குற்றம் மற்றும் சதித்திட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு தரப்பு குற்றஞ்சாட்டப்பட்டோரை பொடா சட்டத்தின் கீழ் கைதுச்செய்ய கோரியபொழுது பொடா மறுஆய்வு கமிட்டி இதனை தடைச்செய்தது.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன் இச்சம்பவம் விபத்து இல்லை எனவும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றப்பட்டது எனக்கூறியது. கோத்ரா ரெயில் எரிப்பில் முதல்வர் மோடி, இதர அமைச்சர்கள், போலீசார் ஆகியோருக்கு பங்கில்லை எனவும் தெரிவித்தது.

ஆனால், மத்திய ரெயில்வேதுறையால் நியமிக்கப்பட்ட பானர்ஜி கமிஷன் தனது அறிக்கையில், கோத்ரா ரெயிலில் எரிபொருள் உள்ளேயிருந்து பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார். இக்கமிஷன் அறிக்கையை குஜராத் உயர்நீதிமன்றம் வெளியிட தடைவிதித்தது.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

இளைஞர்கள் தங்கள் உயிரின் மதிப்பை உணர்ந்துக்கொள்ள வேண்டும் -டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி

ஜன.24:துனீசியாவில் முஹம்மது பொவைஸி என்ற இளைஞரின் தற்கொலையால் மக்கள் புரட்சி ஏற்பட்டு அந்நாட்டின் சர்வாதிகாரி பின் அலி நாட்டைவிட்டு வெளியேறினார்.

இந்நிலையில் துனீசியாவை பின்பற்றி எகிப்து, அல்ஜீரியா, மவுரிடானியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பட்டினி காரணமாக இளைஞர்கள் தற்கொலை முயற்சியை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தங்களது உயிரை தாமே பறித்துக்கொள்வது இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதை அறிவுத்தும்விதமாக சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரான பிரபல சிந்தனையாளர் டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி விடுத்துள்ள அறிக்கையில், முஸ்லிம் அரபு இளைஞர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தீக்குளித்து தற்கொலைச் செய்வது நீங்கள் செய்யவேண்டிய வேலை அல்ல.

எகிப்து, அல்ஜீரியா, மவுரிடானியா போன்ற நாடுகளில் முஸ்லிம் இளைஞர்கள் தங்களை தாங்களே தீவைத்துக் கொளுத்துவது வெறுப்பை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தை பற்றிய கவனக் குறைவுதான் இதற்கு காரணம்.

அல்லாஹ்வின் அருளில் எவரும் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது.
"அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்".(திருக்குர்ஆன் 12:87)

ஆதலால் ஒவ்வொரு கஷ்டத்திற்கு பிறகு நிச்சயமாக நிம்மதி கிடைக்கும். இரவுக்கு பின்னர்தான் விடியலே ஏற்படுகிறது. இவ்விஷயத்தில் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.

எனதருமை இளைஞர்களே உங்கள் உயிர்களைக் குறித்து கவனமாக இருந்துக் கொள்ளுங்கள். அது அல்லாஹ்வின் மிகப்பெரும் எல்லை. உங்களை நீங்களே தீவைத்துக் கொளுத்தாதீர்கள். நீங்கள் பொறுமையாக இருங்கள், சகித்துக் கொள்ளுங்கள், நிலை குலையாமல் இருங்கள். நாளை விரைவில் வரும். இஸ்லாம் அடக்குமுறைக்கும், கொடுங்கோன்மைக்கும் எதிராக போராட கூறுகிறது. அதற்கு தற்கொலை தேவையில்லை. இவ்வாறு கர்தாவி கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கெதிராக பாகிஸ்தானில் கண்டனப் பேரணி

இஸ்லாமாபாத்,ஜன.24:பாகிஸ்தானில் வடக்கு வசீரிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களை(ட்ரோன்) கண்டித்து பழங்குடி மக்கள் கண்டனப் பேரணியை நடத்தினர்.

கடந்த 3 தினங்களுக்கிடையே நடைபெறும் இரண்டாவது போராட்டமாகும் இது. மிரான்ஷாவில் நடந்த பேரணியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இதற்கிடையே அப்பிராந்தியத்தில் தத்தாவேல் பகுதியில் அமெரிக்கா நடத்திய இரண்டு ஆளில்லா விமானத் தாக்குதலில் ஏழு போராளிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தோகா மடோக்கல் கிராமத்தில் போராளிகளின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு பேரும், மோட்டார் சைக்கிளில் நடந்த தாக்குதலில் 3 பேர்களும் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களைக் கண்டித்து மில் அலியில் கடைகள் மூடப்பட்டன. சாலையில் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.

அமெரிக்கா போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறிவிட்டு அப்பாவி மக்களை கொன்று குவிப்பதாக கண்டனப் பேரணியில் பங்கேற்று பேசிய பழங்குடி தலைவர்களும், வர்த்தகர்களும், மாணவர்களும் குற்றஞ்சாட்டினர். இத்தகைய தாக்குதல்கள் அப்பிராந்தியத்தில் வாழும் மக்களை கடுமையாக பீதி வயப்படுத்தியுள்ளதாக வர்த்தக அமைப்பு ஒன்றின் தலைவர் அப்துல் ஹகீம் கூறுகிறார்.

மஸ்ஜிதிலோ அல்லது கலாச்சார நிகழ்ச்சிகளிலோ சென்றால் தாக்குதல் நடந்துவிடுமோ எனப் பயந்து அங்கு செல்லமுடிவதில்லை என மாணவர் அமைப்பின் தலைவர் அப்துல் ரவூஃப் கூறினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

யு.ஏ.இ:கடுமையான வட்டியை வசூலிக்கும் க்ரெடிட் கார்டுகள்

துபாய்,ஜன.24:யு.ஏ.இயில் வங்கிகளால் அளிக்கப்படும் க்ரெடிட் கார்டுகள் (கடன் அட்டை) வாடிக்கையாளர்களிடமிருந்து கடுமையான வட்டியை வசூலிப்பதாக அந்நாட்டில் வெளியாகும் அல் கலீஜ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மாதந்தோறும் 2.25 சதவீதம் முதல் 2.99 சதவீதம் வரையிலான வட்டியை யு.ஏ.இயில் வங்கிகள் வெளியிடும் க்ரெடிட் கார்டுகள் மூலம் வசூலிப்பதாக இப்பத்
Justify Fullதிரிகை குற்றஞ்சாட்டுகிறது.

வருடாந்திர வட்டிவிகிதத்தில் இது 35 சதவீதமாகும். சவூதி அரேபியா, கத்தர், பஹ்ரைன், எகிப்து போன்ற நாடுகளில் வங்கிகள் அளிக்கப்படும் க்ரெடிட் கார்டுகள் மூலம் இரண்டு சதவீதத்திற்கு குறைவான வட்டி வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

முஸ்லிம் அணுசக்தி விஞ்ஞானிகளை கொலைச் செய்யும் மொஸாத்

டெஹ்ரான்,ஜன.24:மேற்காசிய நாடுகளில் பிரபல முஸ்லிம் விஞ்ஞானிகளின் கொலைகளில் இஸ்ரேலின் பயங்கரவாத உளவு அமைப்பான மொஸாதின் பங்கு மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

ஈரான் அணுசக்தி விஞ்ஞானி மாஜித் ஷஹரியாரின் கொலையில் மொஸாதின் பங்கு தெளிவானதைத் தொடர்ந்து இதுத் தொடர்பாக கூடுதல் விபரங்கள் வெளியாகியுள்ளன.

பிரிட்டீஷ், அமெரிக்க உளவு அமைப்புகளுடன் கைக்கோர்த்துக் கொண்டு முஸ்லிம் விஞ்ஞானிகளை கொன்றொடுக்கும் நீண்ட வரலாறு இஸ்ரேலின் மொஸாத் உளவு அமைப்பிற்கு உண்டு என ஈரானின் நியூக் டாட் ஐ.ஆர் என்ற இணையதளம் கூறுகிறது.

அமெரிக்காவில் உள்பட ஏராளமான மொஸாதினால் கொல்லப்பட்ட அரபு விஞ்ஞானிகளின் பெயர்களை இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

எகிப்து நாட்டைச் சார்ந்த ஸாமிர் நஜீப், நபீல் அல்க்வலானி, நபீல் அஹ்மத் ஃபுழைஃபல், அரபு உலகத்தின் ஐன்ஸ்டீன் என புகழப்படும் முஸ்தஃபா அலி முஷ்ரிஃபா, ஜமால் ஹம்தான், ஸஈத் ஸய்யித் காதிர், ஸல்வி ஹபீப், லெபனானைச் சார்ந்த இயற்பியல் விஞ்ஞானியான ரமால் ஹஸன் ரமால், அரபு உலகின் தாமஸ் ஆல்வா எடிஷன் என புகழப்படும் லெபனானைச் சார்ந்த விஞ்ஞானி ஹஸன் காமில் ஸஹாப் ஆகியோர் மொஸாதினால் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

2010 நவம்பர் 29-ஆம் தேதி ஈரானில் பேராசிரியரான மாஜித் ஷஹரியாரி கொலைச் செய்யப்பட்டார். அன்றைய தினமே மற்றொரு தாக்குதலில் ஃபரீதுன் அப்பாஸி தவானி என்ற ஈரான் விஞ்ஞானியும் கொல்லப்பட்டுள்ளார். சமீபத்தில் டெல் அவீவில் கூடிய மொஸாதின் கூட்டத்தில் ஷஹரியாரின் கொலை உள்பட பல்வேறு விஷயங்களைக் குறித்து விவாதிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.

2010 ஜனவரியில் டெஹ்ரானில் நடந்த குண்டுவெடிப்பில் அணுசக்தி விஞ்ஞானியும், பல்கலைக்கழக பேராசிரியருமான மசூத் அலி முஹம்மதி கொலைச் செய்யப்பட்டிருந்தார். டிசம்பர் மாத இறுதியில் ஈராக்கின் இளம் வயதைக்கொண்ட அணு விஞ்ஞானி முஹம்மத் அல்ஃபவ்ஸ் மர்மமனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான அவருடைய புதிய ஃபார்முலா ஏராளமான மேற்கத்திய பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

350 ஈராக் நாட்டு அணு விஞ்ஞானிகள், 300க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிர்யர்கள் கொலையில் மொஸாதிற்கு பங்குள்ளதாக ஏற்கனவெ செய்திகள் வெளியாகியிருந்தன. இவற்றில் முஹம்மது ஃபவுஸின் கொலை கடைசியாக நடந்ததாகும்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

அமெரிக்க முஸ்லிம் இளைஞருக்கு குவைத்தில் சித்திரவதை

வாஷிங்டன்,ஜன.22:அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் அலெக்சாண்ட்ரியாவைச் சார்ந்தவர் குலத் முஹம்மது என்ற 19 வயது இளைஞர். இவர் சோமாலியாவில் பிறந்தவர். தற்போழுது அமெரிக்க குடிமகனாக இருக்கிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் குவைத் நாட்டிற்கு செல்லும்பொழுது விமானநிலையத்தில் வைத்து கைதுச் செய்யப்படுகிறார். இதனைத் தொடர்ந்து இவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

விசாரணையின் போது யெமனுக்கும், சோமாலியாவுக்கும் நீ ஏன்? பயணம் மேற்கொண்டாய்? என அந்நாட்டு அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அவ்வேளைகளில் விசாரணை அதிகாரிகள் குலத் முஹம்மதை காலில் கடுமையாக அடித்தும் உடலின் இதர பகுதிகளில் கம்பால் அடித்தும் சித்திரவதைச் செய்துள்ளனர். பிறப்புறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சுவிடுவோம் எனக்கூறி மிரட்டியுள்ளனர்.

ஒரு மாத சிறைவாசத்திற்கு பிறகு குலத் முஹம்மது அமெரிக்கா திரும்பியுள்ளார். இதுக் குறித்து இவரது வழக்கறிஞர் தெரிவிக்கையில், அமெரிக்காவின் உத்தரவின்படியே குலத் முஹம்மது கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார் என தெரிவிக்கிறார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இவரது வழக்கறிஞர்கள் அமெரிக்க நீதித்துறை, எஃப்.பி.ஐ மற்றும் தீவிரவாத கண்காணிப்பு மையம் ஆகியவற்றின் மீது வழக்கினை பதிவுச் செய்துள்ளனர்.

எஃப்.பி.ஐயின் செய்தியாளர் இதுக்குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

செய்தி:AFP

மதீனாவில் திருக்குர்ஆன் டிஜிட்டல் ஆய்வு மையம்

ஜித்தா,ஜன.23:சவூதி அரேபியாவில் இஸ்லாமிய புனித ஸ்தலங்களில் ஒன்றான மதீனாவில் திருக்குர்ஆன் டிஜிட்டல் ஆய்வு மையம் ஒன்று துவக்கப்பட உள்ளது.

இணையதளங்களில் வெளியிடப்படும் தவறுதலாகவும், திருத்தியும் வெளியிடப்படும் திருக்குர்ஆன் வசனங்களை பாதுகாப்பதற்காக சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் உத்தரவின்படி இந்த டிஜிட்டல் ஆய்வு மையம் துவக்கப்படவுள்ளது.

திருக்குர்ஆன் கல்வி, ஓதுதல் ஆகியவற்றிற்கான கம்யூட்டர் புரோகிராம்கள், இணையதளங்களுக்கான அதிகாரப்பூர்வ மையமாக இந்த டிஜிட்டல் ஆய்வு மையம் செயல்படும். இம்மையம் மதீனாவில் கிங் ஃபஹத் திருக்குர்ஆன் காம்ப்ளக்ஸின் கீழ் துவக்கப்படவுள்ளது.

திருக்குர்ஆன் அறிஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த ஆய்வுமையத்தில் செயல்படுவார்கள் என கிங் ஃபஹத் திருக்குர்ஆன் காம்ப்ளக்ஸ் பொதுச்செயலாளர் முஹம்மது அல் ஊஃபி தெரிவித்தார்.

சில இணையதளங்கள் வெளியிடும் திருக்குர்ஆன் வசனங்களில் தவறுகள் காணப்படுகின்றன. ஆய்வு மையத்தின் வல்லுநர்கள் இந்த திருக்குர்ஆன் வசனங்களை படித்து, ஆய்வுச் செய்வார்கள். தவறுகளில்லை என உறுதிச் செய்தபிறகு அவற்றிற்கு டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்படும். பரிசோதித்த வசனங்களை வெளியிடுவதற்கான லைசன்ஸாக இந்த சான்றிதழ் அமையும் என முஹம்மது அல் ஊஃபி தெரிவித்தார்.

பரிசுத்த திருக்குர்ஆனின் சேவைக்காக சவூதி அரேபியா அளித்துவரும் முக்கியத்துவத்தை திருக்குர்ஆன் டிஜிட்டல் ஆய்வுமையம் நிரூபிக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

அமெரிக்காவின் குண்டுவீச்சில் ஆப்கான் கிராமம் முற்றிலும் அழித்தொழிப்பு

லண்டன்,ஜன.23:காந்தஹார் மாகாணத்தில் அர்கந்தாத் நதியின் பள்ளத்தாக்கில் அந்நிய ஆக்கிரமிப்பு அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய குண்டுவீச்சில் ஒரு கிராமமே அழிந்து போனதாக செய்தி ஒன்று கூறுகிறது.

தாலிபான்கள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறித்தான் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. பிரிட்டீஷ் பத்திரிகையான டெய்லி மிரர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இக்கிராமத்திலிருந்து போராளிகளை விரட்டியடிக்க இரண்டு முறை நடந்த முயற்சிகள் தோல்வியுற்றதைத் தொடர்ந்து அக்கிராமத்தையே முற்றிலும் அழித்தொழிக்க அந்நிய ஆக்கிரமிப்பு கூட்டுப்படையின் கமாண்டர் லெஃப்டினண்ட் கர்னல் டேவிட் ஃப்ளின் மூளையில் உதித்த கொடூர எண்ணத்தினால் அந்த கிராமத்தையே அழித்தொழிக்க உத்தரவிட்டார்.

குண்டுவீச்சிற்கு முன்பும் பிறகும் எடுத்த புகைப்படங்களை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது. 
 

டரோக் கலோசே (Tarok Kolache) என்ற ஆப்கான் கிராமம்தான் அமெரிக்க வெறி ராணுவத்தின் அழித்தொழிப்புக்கு ஆளாகியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பிறரை அக்கிராமத்தின் பக்கம் அனுமதிக்காததால் எத்தனை சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை. 25 டன் குண்டுகளை அமெரிக்க பயங்கரவாத ராணுவம் அக்கிராமத்தின் மீது வீசியுள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More