தங்கத்துடன் போட்டி போடும் பெட்ரோல் - மீண்டும் உயர்வு

பெட்ரோல் விலையை மீண்டும் உயர்த்தப் போவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அறிவித்துள்ளது. வருகின்ற ஜூன் 1 ஆம் திகதி முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1 .35 உயர்த்தப்படுகிறது.பெட்ரோல் விலை கடந்த மே 15 அன்றுதான் லிட்டருக்கு ரூ 5 உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 15 நாட்களுக்குள் மற்றொரு விலை உயர்வை வாகன ஓட்டுனர்கள் சந்தித்துள்ளனர்.

கடந்த உயர்வின் போதே விலையை உயர்த்தினாலும் நஷ்டம் இருப்பதால் மேலும் விலையை உயர்த்தக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் ஜூன் மாதம் முதல் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.அன்று முதல் 11 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் 26,2010 அன்று பெட்ரோல் விலை ரூ 51.43 ஆக இருந்தது. விலை உயர்வுக்கு பின் டில்லியில் பெட்ரோலின் விலை ரூ 64.72 ஆக இருக்கும்.

தங்க விலை உயர்வைப் போல் பெட்ரோல் விலையும் அடிக்கடி உயர்வது மக்களை பாதிப்படையச் செய்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More