அடிப்படை தகவல்

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்
மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும்,அவர்கள் தங்கள் தலை முக்காட்டைத் தாழ்த்திக்கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள்(யாரென)அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்கஇது சுலபமான வழியாகும். (33:59)இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக!அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்;தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ளவேண்டும். தங்கள் அழகலங்காரத்தை அதினின்றும் தெரியவேண்டியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால்மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (24:31

ரமழானின் சிறப்புகள்

asslaamu alaikum
ரமழானில் அல்லாஹ்aவுக்காக, அவனது கூலியை நாடி,உள்ளச்சத்துடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள்மன்னிக்கப்படுகின்றன: அவ்விரவுகளில் தொழுதவரின்முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அம்மாதத்தின்சிறப்பான “லைலத்துல் கத்ர்” இரவை பெற்றவரின்முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி(ஸல்)நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி)நூல்:புகாரி, முஸ்லிம்நோன்பாளி செய்யக் கூடாதவைஎவன் பொய்யான சொற்களையும், தீய நடத்தையையும்,விடவில்லையோ அவன் உண்ணாமல்பருகாமலிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும்இல்லை. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) புகாரிநீங்கள் நோன்பு வைத்திருக்கையில் கெட்டப்பேச்சுக்கள் பேசுவதோ கூச்சலிடுவதோ கூடாது.அவனை யாரேனும் ஏசினால், அல்லது அவனுடன் சண்டையிடமுற்பட்டால் “நான் நோன்பாளி” என்றுகூறி விடவும். நபி (ஸல்) அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரழி) புகாரி, முஸ்லிம்நோன்பின் தற்காலிக சலுகைகள்நீங்கள் பயணத்திலோ நோய்வாய்ப்பட்டவர்களாகவோ இருந்தால் வேறொரு நாளில்அதனை நோற்கவேண்டும். (அல்குர்ஆன்: 2:185)எங்களுக்கு மாதவிடாய் ஏற்படுகையில்(விடுபட்ட) நோன்பை வேறு நாட்களில்நோற்கும்படியும், அதே காலத்தில் விடுபட்டதொழுகையை வேறு நாட்களில் நிறைவேற்றகூடாது என்றும் உத்திரவிடப் பட்டிருந்தது.அறிவிப்பவர்: அன்னை ஆயிஸா (ரழி) நூல்:முஸ்லிம்அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில்இருக்கும்போது நோன்பு நோற்கஎனக்கு சக்தி உள்ளது. அப்போது நோன்புநோற்பது என்மீது குற்றமாகுமா? என்று நான்கேட்டபோது, நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ் வழங்கியசலுகையாகும். எவன் இந்தச் சலுகையைப்பயன்படுத்துகின்றானோ, அது நல்லது தான்.நோன்பு நோற்க எவரேனும் விரும்பினால் அதில்குற்றம் ஏதும் இல்லை. அறிவிப்பவர்:ஹம்ஸா இப்னு அம்ரு(ரழி) நூல்:முஸ்லிம்நேன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைநபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது பலமுறை பல் துலக்கிக் கொண்டிருக்க நான்கண்டுள்ளேன். அறிவிப்பவர்: ஆபிர் இப்னு ரபிஆ (ரழி)நூல்:அபூதாவூது, திர்மிதீநபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தபோது தாகத்தின் காரணமாகவோ, அல்லது கடும்வெப்பத் தினாலோ தங்கள் தலைமீது தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்ததை அர்ஜ் என்ற இடத்தில் வைத்து நான்பார்த்தேன். அறிவிப்பவர்:மாலிக் (ரழி)நூல்:அபூதாவூதுநோன்பு நோற்றிருப்பவர் தான்நோன்பாளி என்பதை மறந்த நிலையில்உண்ணவோ பருகவோ செய்து விட்டால்(நோன்பு முறிந்து விட்டது என்று எண்ண வேண்டாம்)மாறாக அந்த நோன்பையே முழுமைப் படுத்தட்டும்,ஏனெனில் அவனை அல்லாஹ் உண்ணவும், பருகவும்செய்திருக்கின்றான். நபி (ஸல்)அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்:புகாரி, முஸ்லிம்சஹர் செய்தல்நீங்கள் சஹர் செய்யுங்கள்: ஏனெனில் அதில்(அபிவிருத்தி) பரகத் உண்டு. நபி(ஸல்) அறிவிப்பவர்:அனஸ் (ரழி) புகாரி, முஸ்லிம்ஒரு ரமழானில் சஹர் உண்ண என்னை நபி (ஸல்) அவர்கள்அழைத்தனர். பரகத் நிறைந்த உணவு உண்ண வாரும்என்று அப்போது கூறினர். நூல்:அபூதாவுது,நஸ்யீநாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் சஹர் உணவு உண்டோம்:அதன் பிறகு பஜ்ரு தொழுகைக்கு நின்றோம். ஸஹர்உணவு உண்டதற்கும் பஜ்ரு தொழுகைக்கும் இடையில்எவ்வளவு நேரமிருந்தது என நான் வினவினேன்.அதற்கு அவர் திருக்குர்ஆனின் ஜம்பது வசனங்கள்ஓதுகின்ற அளவு இடைவெளி இருந்தது எனவிடை பகர்ந்தார்கள். அறிவிப்பவர்: ஜைது பின் தாபித்(ரழி) நூல்: புகாரீ,முஸ்லிம்நோன்பு திறப்பதுஅல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.நோன்பு திறப்பதில் காலதாமதம் செய்யாத வர்கள் தான்எனக்கு விருப்பமான அடியார்கள். அறிவிப்பவர்:இப்னு உமர் (ரழி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜ்ஜாநீங்கள் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தின்மூலம் நோன்பு திறங்கள்! அது கிடைக்காவிட்டால்தண்ணீர் மூலம் நோன்பு திறங்கள். என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரழி)நூல்:திர்மிதீ, அபூதாவூது

ஒஸாமாவின் உடலைத் தேடும் பணியில் அமெரிக்கர்

கடந்த மே 2 அன்று ஒஸாமா பின் லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் கமாண்டோக்கள் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் சுட்டுக் கொன்றதாகவும் பின்னர் ஒஸாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்து விட்டதாகவும் அமெரிக்க ராணுவம் அறிவித்தது.

ஆனால் ஒஸாமா கடலில் அடக்கம் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆதாரங்கள் எதையும் அமெரிக்கா வெளியிடவில்லை. அனைத்து சோதனைகளையும் முடிந்த பின்னர் வடக்கு அரபிக்கடல் பகுதியில் முஸ்லிம் மத சடங்குகள் செய்யப்பட்ட பிறகு அதிக எடையுள்ள ஒரு பையில் வைத்து ஒஸாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஒஸாமாவின் உடலைக் கண்டு பிடிப்பதற்காக முன்வந்துள்ளார் பில் வாரன் என்ற அமெரிக்கர். இவர் கலிபோர்னியாவைச் சார்ந்தவர். கடலில் புதையலைக் கண்டுபிடிப்பதற்காகவும் மூழ்கிய கப்பல்களைக் கண்டு பிடிப்பதற்காகவும் உள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தத் தொழிலை இவர் 1972 முதல் செய்து வருகிறார். ஒபாமா அரசை தான் நம்பவில்லை என்றும் அதனால்தான் பின்லேடன் உடலைத் தேடும் பணியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிநவீன சாதனங்கள் உதவியுடன் இந்தப் பணியை செய்யவிருப்பதாகவும் இதற்கு ஏறத்தாழ 400,000 டாலர் செலவிட இருப்பதாகவும் பில் வாரன் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு அமெரிக்க தேசபக்தன் என்பதால் ஒஸாமாவின் உடலைக் கண்டறிந்து உலகுக்குக் காட்டி உண்மையை உணர்த்த இருப்பதாக சொல்கிறார் 59 வயதாகும் வாரன். ரஷ்யாவைச் சார்ந்த தனது நண்பி ஒருவர் ரஷ்யாவில் உள்ள உயர்நிலை காவல் அதிகாரிகள் ஒஸாமா கொல்லப்பட்டதை நம்பவில்லை என சொன்னதுதான் தனது இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குண்டு வெடிப்புகளில் பாகிஸ்தானில் 34 பேர் பலி; 90 பேர் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வட மேற்கு நகரான பெஷாவரிலுள்ள சந்தைப் பகுதியொன்றில் இடம்பெற்ற இருகுண்டு வெடிப்புகளில் 34 பேர் கொல்லப்பட்டதுடன் 90 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பெஷாவரில் அரசியல் மற்றும் இராணுவ அலுவலகங்கள் அமைந்திருக்கும் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

முதலாவது குண்டுவெடிப்பு சிறியளவிலேயே இடம்பெற்றபோதும் அதற்குச் சில நிமிடங்களில் வெடித்த இரண்டாவது குண்டு பாரியதாக இருந்ததாகவும் இதிலேயே அதிகளவான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வாகனமொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டாவது குண்டு தூர இருந்து இயக்கும் கருவி மூலம் வெடிக்க வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இக்குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற பகுதிக்கு அருகாமையில் அரசியல் அலுவலகங்கள், பல பத்திரிகை நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் படைமுகாம் என்பன அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இப் பகுதியில் பிரசித்திபெற்ற உணவகங்கள் மற்றும் கடைகள் என்பன உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் அல்ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதிலிருந்து பாகிஸ்தானில் போராளிகளின் தாக்குதல் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பி.பி.சி நன்றி

ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருது பெறவில்லை-ஆஸ்கர் குழு பதில்

வாஷிங்டன்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கவில்லை என்று ஆஸ்கர் குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கினார். ஆனால் அவர் அதை பணம் கொடுத்து வாங்கியதாக இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை ஆஸ்கர் குழு மறுத்துள்ளது.

இது குறித்து அந்த குழு கூறியதாவது,

ஆஸ்கர் விருதுக்கு தவறான நபரை குழு தேர்ந்தெடு்த்துள்ளது என்று ஒருவர் குறை கூறுவது புதிதல்ல. ஆனால் ஒருவர் தவறான வழியில் விருதை வாங்கியுள்ளார் என்று கூறுவது ஆதாரமற்றது, நம்ப முடியாதது.

எங்களுக்கு இஸ்மாயில் தர்பார் பற்றி தெரியாது. அவர் எந்த ஆதாரத்தை வைத்து ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருதை வாங்கியதாகக் கூறுகிறார் என்று தெரியவில்லை என்று அகாடமி பத்திரிக்கையாளர் டெனி மெலிடோனியன் தெரிவித்தார்.

கடந்த வாரம் இந்த குற்றச்சாட்டு எழுந்தபோது அதை கேலியான விஷயம் என்று எடுத்துக் கொண்டதால் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என்றார்.

இது குறித்து ஆஸ்கர் குழு வேலும் கூறுகையில்,

வாக்கெடுப்பு முறையில் தான் விருது வழங்கப்படுகிறது. அகாடம் அதிகாரி யாராவது குளறுபடி செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட முடியாத அளவுக்கு பாதுகாப்பாகத் தான் நடத்தப்படுகிறது.

பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் அலுவலகம் தான் இசை பிரிவுக்கான வாக்கெடுப்பைக் கவனித்து வருகிறது என்று தர்பாருக்கு தெரியாது.

விருது பெறுபவர்களின் பெயர்கள் இருக்கும் கவர்களை 2 அதிகாரிகள் தயார் செய்வார்கள். மேடையில் அந்த கவர்களைத் திறக்கும் வரை அது அவர்கள் பாதுகாப்பில் தான் இருக்கும் என்று கூறியுள்ளது.

இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் கூறிய குற்றச்சாட்டு,

கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன்.

உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என்றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும், என்றார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More